News Tamil OnlineTamil Technology NewsThatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Papaya Leaves For Dengue: பப்பாளி இலையின் மருத்துவப்பயன்கள்; டெங்குவிற்கு எதிர்ப்புசக்தியாக இருக்குமா..?

Papaya Leaves For Dengue: பப்பாளி இலையின் மருத்துவப்பயன்கள்; டெங்குவிற்கு எதிர்ப்புசக்தியாக இருக்குமா?

பப்பாளி இது ஒரு பயன் தரும் மருத்துவக் குணம் நிறைந்த மரம் ஆகும்.

Papaya Leaves For Dengue

Papaya Leaves Benefits:

பப்பாளி மரத்தின் இலைகள் ஆமணக்கு செடியின் இலைகளின் வடிவத்தோடு ஒத்திருக்கும். இதன் மரம் நெடு நெடுவென்று வளரும் தன்மைகொண்டவை.

இதன் மரத்தின் இலைகள் உதிர்ந்து தழும்புகளை உண்டாக்கி விடுவதால் அடி முதல் நுனி வரை ஒரு சொரசொரப்பான மேடு பள்ளங்களை கொண்டிருக்கும்.

இது சுமாா் பத்து மீட்டா் வரை வளரும். இதன் ஆயுட்காலம் இருபது ஆண்டுகள்.

பப்பாளியின் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருப்பது நம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பழத்தில் மட்டுமன்றி அதன் இலைகளில் கூட எண்ணற்ற இயற்கை மருத்துவங்கள் அடங்கியுள்ளன.

மாத்திரைகளால் கூட சரி செய்ய முடியாத நோய்களை இந்த இலை சரி செய்துவிடுகிறது.

குறிப்பாக டெங்கு, டைஃபாய்டு போன்ற நோய்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க இலையின் சாறு சிறந்த பயனுள்ளதாக இருக்கிறது.

Papaya Leaves For Dengue:

பப்பாளி இலை சாற்றை குடிப்பதனால் நம் உடலுக்கு தேவையான பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மேலும், இதில் செரிமானத்திற்கு உதவும் பாப்பேன் (papain) மற்றும் சைமோபபைன் (chymopapain) போன்ற நொதிகள் நிறைந்து காணப்படுகிறது. இவை, வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளையும் தடுக்க உதவுகிறது.

இதன் இலைகளில் உள்ள ஆல்கலாய்டு கலவை (alkaloid compound), பொடுகு மற்றும் வழுக்கை போன்ற சிக்கல்களுக்கு எதிராக செயல்படுகிறது.

இலைகளில் A, C, E, K மற்றும் B வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

பப்பாளி இலைகளில் இருந்து டீ, ஜூஸ் போன்றவை தயாரித்து குடிக்கலாம். மேலும் உடல் ஆரோக்யத்திற்கு தேவையான மாத்திரைகளும் இதில் தயாரிக்கப்படுகின்றன.

Is Papaya Leaf Good For Dengue?

டெங்கு சிகிச்சை:

டெங்கு அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பப்பாளி இலை மிகவும் நன்மை பயக்கும்.

மேலும்,டெங்குவினால் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். கூடவே, உடலில் இரத்தத் தட்டுக்களை அதிகரிக்கவும் இந்த இலை உதவுகிறது.

டெங்கு நோய் அறிகுறியை கவனிக்காமல் இருந்தால், அது நாளடைவில் ரத்த பிளேலெட்களின் எண்ணிக்கை குறைத்து, ரத்தப்போக்கினை ஏற்படுத்தும்.

இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் இந்த பப்பாளி இலை டெங்கு காய்ச்சலின்போது குறையும் பிளேலெட்டுகளை அதிகரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது.

முடி வளர்ச்சி அதிகரிக்க :

நம் உடலில் அதிக அளவு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாகத்தான் முடி உதிர்வு ஏற்படுகிறது.

எனவே, நாம் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவை அதிகம் உட்கொண்டால் அதன் அழுத்தம் குறைந்து, முடி வளர்ச்சியும் அதிகம் மேம்படுகிறது.

அந்த வகையில், உச்சந்தலையில் இதன் சாற்றை பயன்படுத்துவதால் முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும், பப்பாளி இலையின் சாற்றில் இருக்கும் antifungal பண்புகள், மலாசீசியா (Malassezia) எனப்படும் பூஞ்சை ஏற்படுத்தும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்துகிறது.

ரத்தத்தில் சர்க்கரை சமநிலை :

பெரும்பாலும் இதன் இலைகள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதற்கும் ஒரு இயற்கை மருந்தாக பயனளிக்கிறது.

எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் முடிவில், பப்பாளி இலைச்சாறில் ஆக்ஸிஜனேற்ற பண்பு இருப்பதாகவும், அதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதும் தெரியப்படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு :

பாரம்பரிய மருத்துவ முறைகளில் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் பப்பாளி இலையினை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதை உறுதிப்படுத்த போதுமான ஆராய்ச்சிகள் இல்லை.

மேலும், ஆய்வாளர்கள் சோதனை-குழாயின் மூலம் நடத்திய ஆய்வுகளில் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி பப்பாளி இலைச்சாறுகளுக்கு உண்டு என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், இந்த சோதனையினை மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது செய்து உறுதிப்படுத்தவில்லை.

Also Read: Radish Leaf Benefits: முள்ளங்கி இலையின் பயன் அறியாமல் அதை தூக்கிப்போடுகிறீர்களா..? இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்..!

குறிப்பு:

பப்பாளி இலையின் அனைத்து பக்கங்களும் கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது.

எனவே, மருத்துவர்கள் கர்பிணிப்பெண்களுக்கு பப்பாளியினை கொடுப்பதை தவிர்க்க கூறுகின்றனர்.

குறிப்பாக பழுக்காத பப்பாளி பழத்தில் லேடெக்ஸின் என்னும் நொதி அதிகம் உள்ளது, இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *