all

Benefits Of Eating Banana: தினமும் ஓர் வாழைப்பழம் சாப்பிடுவதன் நன்மைகள்..!

Benefits Of Eating Banana: தினமும் ஓர் வாழைப்பழம் சாப்பிடுவதன் நன்மைகள்..!

மிகவும் மலிவாகவும், அதேசமயம் எல்லா இடங்களிலும் பொதுவாகவும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் இந்த வாழைப்பழம்.

Benefits Of Eating Banana

Benefits Of Eating Banana:

மேலும், இந்த வாழைப்பழத்தில் பலவகைகளும் உள்ளன.
அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்;

  • கிராண்ட் நைன்
  • கர்பூரவள்ளி
  • நேந்திரன்
  • பச்சநதன்
  • பூவன்
  • செவ்வாழைப்பழம்
  • ரஸ்தாலி
  • ரோபஸ்டா
  • மலை வாழைப்பழம்…. போன்றவையாகும்.

இந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை முழுவதும் அறிவோம் வாருங்கள்.

பெருங்குடலை சுத்தமாக வைக்க:

ஒரு வாழைப்பழத்தில் தினசரி நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து 12 சதவிகிதம் நிறைந்துள்ளது.

அதிலும் பச்சை வாழைப்பழம் மிகவும் ஏற்றது,(பச்சை வாழை வகை).ஏனெனில் அதில் resistant starch எனப்படும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இது கரையாத நார் போல செயல்பட்டு குடல் இயக்கத்தை சிறப்பாக வைக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்:

வாழைப்பழத்தில் உள்ள இரும்பு, துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நம் தினசரி உடலிற்கு தேவையான சத்துக்களை தருகிறது.

மேலும் இது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியினை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

ரத்தத்தில் வெள்ளை அணுக்களை மேம்படுத்த,பழுக்காத வாழைப்பழங்களை விட பழுத்த வாழைப்பழங்கள் தான் சிறந்தது.

What Are The Benefits Of Eating Banana?

இதயத்தினைக் காக்கும்:

நம் உடலின் நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள செல்களுக்கு மிகவும் தேவையான ஒன்று பொட்டாசியம்.

உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்பட்டால் அது உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் போன்ற உடல் கோளாறுகளை ஏற்படுத்தும்.

எனவே, நாம் தினம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டோமானால் அது நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்துக்கள் தருவதுடன், இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுத்து இதய ஆரோக்கியத்தையும் காக்கும்.

மாதவிடாய் பிரச்சனைக்கு:

வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்து உள்ளது. இது தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்கு படுத்தவும் செய்கிறது.

இதிலுள்ள இரும்பு சத்து மாதவிலக்கு நோயினால் ஏற்படும் பிரச்சனையினை தீர்க்கவல்லது.

வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் உடலில் நீர் தங்கியிருக்கும் தன்மையை தடுக்கிறது, இது பெண்களுக்கு மிகவும் பயன் தருவதாக அமைகிறது.

உடற்பயிற்சிக்கான சரியான உணவு:

ஒரு சராசரி அளவிலான வாழைப்பழத்தில் 12மி.கி. கோலைன் இருக்கிறது. வைட்டமின் B வகையைச் சேர்ந்த இந்த கோலைன், உடலில் கொழுப்பை சேமித்து வைக்கும் மரபணு மூலக்கூறுகளில், தாக்கத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டது.

வாழைப்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து குறைவாக உணவு சாப்பிடும் ஒருவருக்கு சாப்பிட்ட ஓர் திருப்பிதியினை கொடுக்கிறது.

நீண்ட தூரம் ஓடுபவர்கள் (மாரத்தான்) மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். ஏனெனில், அதில் நல்ல மாவுச்சத்து உள்ளது. மேலும் அதிக அளவில் குளுக்கோஸ் உள்ளது.

இது எளிதாக ஜீரணமாகக்கூடிய சர்க்கரை மற்றும் உடலுக்கு தேவையான சக்தியையும் நேரடியாக கொடுக்கிறது.

எலும்பு பலம் பெற:

தினசரி நாம் சாப்பிடும் ஒரு வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

வாழைப்பழங்களில் உள்ள சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் குடலில் வாழ்ந்து உடலுக்கு தேவையான கால்சியம் சத்தின் அளவை மேம்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து உடலின் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

இது வலுவான எலும்புகளுக்கு வழிவகுத்து ஆஸ்டியோபொரோஸிஸ்(osteoporosis) போன்ற எலும்பு பாதிப்பினை குறைக்கிறது.

Also Read: Benefits of Pineapple Fruit: உடல் எடையினை குறைக்க உதவுமா அன்னாசி..! இதன் நன்மைகள், தீமைகள் என்னென்ன..?

மூல நோய் உள்ளவர்கள்:

மூல நோய் உள்ளவர்களுக்கு இந்த வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.

இரவு உணவுக்குப்பின் ஒரு பேயன் வாழைப்பழம் மற்றும் பால் அருந்தி வந்தால் மூல நோய் சரியாகும்.

வயிற்றுப் புண் உள்ளவர்கள்:

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எல்லாம் எளிதில் நீங்கிவிடும்.

அதிலும் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அழற்சியையும் குணமாகும்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் சரியாக சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவார்கள் இவர்கள் முறையாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் நீங்கும்.

எனவே, தினமும் ஓர் வாழைப்பழம் உண்ணுங்கள் நல்ல ஆரோக்கியத்தை அடையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *