Mobile Battery Charging Tips: இரவு முழுவதும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது சரியா..?
Mobile Battery Charging Tips: இரவு முழுவதும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது சரியா..?
இப்போது வரக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அதிநவீன மென்பொருள் அம்சங்களுடன் சிறந்த பேட்டரி வசதியுடன் வெளிவருகின்றன.

Mobile Battery Charging Tips:
மேலும் பாஸ்ட் சார்ஜ், டர்போ சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
ஆனாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன்களை அல்லது டாப்ளெட்களை மிகவும் தவறான முறையில் தான் சார்ஜ் செய்து கொண்டு வருகிறோம்.
சார்ஜ் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு முழுவதும் சார்ஜ் செய்யப்படும் எல்லா ஸ்மார்ட்போன்களுமே வெடித்து விடாது தான்,
அப்படி வெடிக்குமென்றால் நாம் மாதம் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டியதிருக்கும்.
அதற்காக, இனி இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மாறாக, எப்படியெல்லாம் சார்ஜ் செய்யக்கூடாது மற்றும் செய்யலாம் என்பதே சரியாக தெரிந்து கொள்ளவும்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஸ்மார்ட்போன் ஆனது குறுகிய நேரத்திற்குள் சார்ஜ் செய்யப்பட வேண்டும் மற்றும் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும்.
அப்போது தான் ஒரு நல்ல ஒட்டுமொத்த பேட்டரி ஆயுளை நாம் பெற முடியும் என்று கூறியுள்ளது.
பேட்டரி பல்கலைக்கழகம் வெளியிட்ட தகலின்படி நீங்கள் 10% அல்லது 20% வரை மட்டுமே சார்ஜ் செய்திருந்தால் கூட பரவாயில்லை, அது ஒரு விஷயமல்ல.
இதுபோன்ற பாரபட்சமான சார்ஜ், ஒரு ஸ்மார்ட்போனை எந்தவிதத்திலும் பாதிக்காது, எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது.
மேலும், உங்கள் பேட்டரியின் வாழ்நாளை நீடிக்க விரும்பினால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள 15 சதவிகிதம் என்கிற சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம்.
ஒரு 65% மற்றும் 75% என்பதற்கு இடையே சார்ஜ் புள்ளியை வைக்க முயற்சி செய்யுங்கள். அதேபோல் 10 முறை 10-10% சார்ஜ் செய்தால் கூட பரவாயில்லை.
ஆனால் ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். முடிந்த அளவு 95% என்கிற புள்ளியில் நிறுத்திக்கொள்ளவும்.
Also Read: Meta AI Supercomputer: உலகின் மிகப்பெரிய AI-சார்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்-உருவாக்கும் மெட்டா..!!
ஏனெனில், இன்றைய நவீன லித்தியம்-அயன் பேட்டரிகள் “முழுமையாக சார்ஜ் செய்யப்பட வேண்டியதில்லை, அது தேவையானதும் இல்லை”.