Benefits of Peanut: கடலை மிட்டாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா..?
Benefits of Peanut: கடலை மிட்டாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா..?
கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வரும் கடலை மிட்டாய் தான், பிரேசில் நாட்டின் பாரம்பரிய இனிப்புப் பண்டமாம்.

Benefits of Peanut:
இதைப் பற்றி நா ஊறவைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களை இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
கடலை மிட்டாய் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. கடலை அதிகம் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும்.
ஆனால் கடலை மிட்டாயில் இனிப்பும் சேர்ந்திருப்பதால் அந்தப் பிரச்சனை இல்லை.
இதை சாப்பிடும் போது மண்ணீரலுக்கு நேரடியாக சத்து கொடுக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
பொதுவாக நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பும், புரோட்டீன், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், மற்றும் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
வெல்லத்தில் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது.

மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது.
உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
கடலை மிட்டாய் சாப்பிடும்போது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும்.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது.
முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் இறைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்களும் இதில் உள்ளது.
அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது.
இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற முளை நரம்புகளை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.
அதேபோன்று போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாது.
கருவின் மூளை, நரம்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக அமையும். கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.
நீங்களே செய்யலாம்! கடலை மிட்டாய்
தேவையான பொருட்கள்:
வெல்லம் -1 கிலோ
நிலக்கடலை -200 கிராம்
தண்ணீர் வெல்லப் பாகை எடுக்க
உப்பு சிறிதளவு
தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி- தேவைப்பட்டால்
முதலில் நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
வெல்லப்பாகை எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.
பாகு நன்றாக திக்காக இருக்கவேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்சவேண்டும்.
இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும்.
தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக்கொள்ளலாம்.
மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள்.
காற்று போகாத ‘ஏர் டைட்’ டப்பாக்களில் சேமித்து வைத்தால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.