இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Chick Peas: முளைவிட்ட கொண்டைக்கடலையை சாப்பிட்டால்..

Chick Peas: முளைவிட்ட கொண்டைக்கடலையை சாப்பிட்டால்..

இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டை கடலையில் உள்ளன.

Healthy Snacks முளைவிட்ட கொண்டைக்கடலையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

முளைவிட்ட கொண்டைக்கடலையை அதிகமாக சாப்பிடால் விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் உடல் சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

Healthy Snacks

உடல் எடை:

கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அவை உடல் எடை குறைய உதவி செய்கிறது. மேலும், தினமும் காலையில் அரை கப் வேகவைத்து சாப்பிட்டு வருவதால் வயிறு நிறைவதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

இதனால் காண்கின்ற உணவுப் பொருட்கள உட்கொள்ளாமல் உணவில் கட்டுப்பாட்டுடன் நம்மால் இருக்க முடியும்.

இரத்த சோகை:

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் அவை ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து ரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து உடல் ஆற்றலை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம்:

இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தான் இதற்கு காரணம். மேலும் இரத்த நாளங்களில் கொழுப்புகள் தங்கி அடைப்பு ஏற்படுவதை தடுத்து மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கிறது.

இரத்த சர்க்கரை:

இதில் உள்ள கரையும் நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். மேலும், இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது.

இதனால் அதிலுள்ள கார்போஹைட்ரேட் உடைந்து மெதுவாக செரிமானமாகி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைக்க உதவும்.

மேலும், தினமும் அரை கப் சுண்டலை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பெண்கள் ஆரோக்கியம்:

பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை கொண்டைக்கடலை சாப்பிட்டால் தடுக்கலாம்.

மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரி செய்யவும் இது உதவும்.

துமட்டுமல்ல கர்ப்பிணிகளுக்கு அவசிய தேவையான போலிக் அமிலம்,ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன.

முளைகட்டிய கொண்டைக்கடலை:

முளைவிட்ட கொண்டக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் அதிக அளவில் நன்மை தரக்கூடியது.

எலும்புகள், நரம்புகள் பலமடைய கொண்டைக்கடலை உண்ணலாம். இதை சாப்பிடும் சிலருக்கு வாயுத் தொல்லை ஏற்படும். நல்ல தண்ணீர் ஊற்றி வேகவைத்து சாப்பிட்டால் வாயு பிரச்சனை குறையும்.

மேல் தோல் வெடிக்கும் வரை நன்கு மெத்தென்று வேக வைக்கத்து அதில் சிறு சிறு துண்டாக இஞ்சியை வேகும்போதே சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை வராமல் தடுக்கலாம்.

எந்த கொண்டைகடலை சிறந்தது?

முக்கியமாக வெள்ளை கொண்டக்கடலையை காட்டிலும் கருப்பு நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

எனவே, கருப்பு நிற கொண்டக்கடலைத்தான் நல்லது. இது அளவில் சிறியதாக இருந்தாலும் மிகவும் உறுதியானது.

யார் கொண்டைகடலை சாப்பிட கூடாது?

பொதுவாக, வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மற்றும், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டக்கடலையை அளவுக்கு அதிகமா உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

Also Read: Muskmelon: கிர்ணி பழம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது. சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், கொண்டைக்கடலை சாப்புடவே கூடாது.