Remedy For Pimples: கருஞ்சீரகம் தரும் அளவில்லா நன்மைகள்..!
Remedy For Pimples: கருஞ்சீரகம் தரும் அளவில்லா நன்மைகள்..!
பலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது கருஞ்சீரகம்..

Remedy For Pimples:
கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெய்யில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.

கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
கருஞ்சீரக எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

Benefits of Black Jeera :
5 கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் வினிகரில் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
முகப்பருவை தீர்க்கும்:
கருஞ்சீரக எண்ணெயுடன் சாத்துக்குடி சாரை சேர்த்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைந்து விடும்.
Also Read: Ponnanganni keerai benefits: பொன்னாங்கண்ணி கீரையின் மகத்தான மருத்துவப் பயன்கள்..!
பற்களை வலிமையாக்குகிறது:
ஈறுகளில் வீக்கம் அல்லது இரத்தப்போக்கு மற்றும் பலவீனமான பற்கள் போன்ற பல் பிரச்சனைகளில் இருந்து கருஞ்சீரகம் பாதுகாக்கிறது.
உடல் பருமன் :
உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் தினமும் கருங்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் LDL என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பு நீங்கி HDL என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அதிகரிப்பதுடன் உடல் பருமனும் குறையும்.
பெண்களுக்கு கிடைக்கும் பலங்கள் :
இன்று அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவதை நாம் அறிவோம் . இதுபோன்ற மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் கருங்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர புற்று நோயில் இருந்து நிவாரணம் பெறலாம். பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை சம்மந்தமான நோய்கள் மற்றும் மாதவிடாய் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கும், ஏற்கனவே இந்த நோய் உள்ளவர்கள் தினமும் கருங்சீரகத்தை சாப்பிட்டு வந்தாலே நோயிலிருந்து விடுபடலாம்.
கருங்சீரகம் முடி உதிர்வை தடுப்பதுடன் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இளநரையை தடுக்கிறது.
கருங்சீரகத்தை சாப்பிடும் முறை:
கருங்சீரகம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நல்ல தரமான கருங்சீரகத்தை வாங்கி அதை சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து சாப்பிட வேண்டும்.
அளவு :
5 வயதிற்கு மேல் உள்ளவர்கள் – 1 சிட்டிகை ( அதாவது கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து எடுத்தால் வரும் அளவு)
பெரியவர்கள் – கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் இந்த மூன்று விரல்களை சேர்த்து எடுத்தால் வரும் அளவு
குறிப்பு : அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது.
கருங்சீரகத்தை யார் சாப்பிடக்கூடாது :
குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்கள், கர்பிணிப்பெண்கள், குடல் புண், வாய்ப்புண் உள்ளவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், அனைத்து விதமான மூல நோய் உள்ளவர்கள் மற்றும் பெண்களில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் கருங்சீரகத்தை எடுத்து கொள்ளக் கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.
எனவே எண்ணிலடங்கா நன்மைகளை தரும் கருஞ்சீரகத்தை அளவாக பயன்படுத்தி நோயில்லாமல் வாழ்வோம்.
நோய் வந்தபின்பு மருத்துவம் செய்வதை விட நோய் வரும்முன் காப்பதே சிறந்தது.