lip scrub: இயற்கையான முறையில் உதட்டின் கருமையை போக்க…!
lip scrub: இயற்கையான முறையில் உதட்டின் கருமையை போக்க…!
உதடுகள் நாளுக்குநாள் மிருதுவான தன்மையையும், இளஞ்சிவப்பு நிறத்தையும் இழந்து, கருமையாகி விட்டதாக கருதுகிறீர்களா?

lip scrub:
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதார பிரச்சினைகள், அழகுசாதனப் பொருட்கள் பயன்பாடு, உதடுகள் உலர்தல் போன்றவை தான் இதற்கு காரணங்களாகும்.
கருமை நிறத்திற்கு மாறிய உதடுகளை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.

- மஞ்சளில் இருக்கும் குர்குமின், சருமத்திற்கு இயற்கையான நிறத்தை வழங்கும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை அதே அளவு ரோஸ் வாட்டரில் கலந்து கொள்ள வேண்டும்.
- முதலில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
- இது உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும். பின்பு மஞ்சள் பேஸ்டை உதட்டில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவிவிடலாம். இதுபோல் தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.

- உதடுகள் வறட்சியாகவோ, கடின தன்மையுடனோ இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைக்கும். தேன், சர்க்கரை கொண்டு உதட்டை சுத்தப்படுத்தியப்பின்பு தேங்காய் எண்ணெய் தடவலாம். தினமும் இரண்டு முறை செய்துவந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- இளஞ்சிவப்பு நிற உதடு கொண்டிருந்தவர்கள் மீண்டும் உதட்டு நிறத்தை மீட்டெடுக்க மாதுளை பழத்தை உபயோகிக்கலாம்.
- ஒரு டீஸ்பூன் மாதுளை பழச்சாறுடன் அதே அளவு பீட்ரூட் சாற்றை கலந்து உதட்டில் தினமும் 2 முறை தடவி வர வேண்டும்.
- கற்றாழை இயற்கையாகவே தோல் நிறமிகளை அகற்றும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்து உதட்டில் தடவி, உலர்ந்ததும் கழுவி விடலாம்.
- இதை தினமும் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.
- எலுமிச்சை பழம் இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உதட்டை கழுவிவிடலாம்.