Science Facts: உலகின் பழமையான மர சக்கரம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளதா ..!
Science Facts: உலகின் பழமையான மர சக்கரம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளதா ..!
2002 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மர சக்கரமானது, ஸ்லோவேனியாவின்(Slovenia) தலைநகரான லுப்லஜானாவிற்கு (Ljubljana) தெற்கே தோராயமாக 12 மைல் தொலைவில், ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மர சக்கரமானது 5,100 முதல் 5,350 ஆண்டுகள் பழமையானது.
இச்சக்கரத்தின் வயதைக் கண்டறிய ரேடியோகார்பன் டேட்டிங் முறை (Radiocarbon dating) பயன்படுத்தப்பட்டது.
ரேடியோகார்பன் டேட்டிங் என்பது உயிரினங்களிலிருந்து தோன்றிய கார்பனை அடிப்படையாக கொண்டு ஒரு பொருட்களின் வயதை கண்டுபிடிக்கும் ஒரு முறையாகும்.
சக்கரங்கள் சுழல்வது போல, நம் வாழ்க்கை சக்கரமும் இனிய முறையில் சுழல வேண்டும்..
உலகின் எல்லா நாடுகளையும் விட சூடானில் அதிக பிரமிடுகள் உள்ளதா ..!
பிரமிடுகள் (pyramids) என்பது நம்மால் நம்ப முடியாத அளவிற்குரிய ஒரு மிகப்பெரிய ஆச்சரியமூட்டும் உண்மையாகும்

அதாவது அந்த பிரமிடுகள் அந்த காலத்தில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு கட்டியிருப்பார்கள் என்பது ஒரு வியப்பூட்டும் உண்மையே.
சூடான் பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிக அதிக பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது.
எகிப்தில் 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சூடானில் தான் 255 பிரமிடுகள் உள்ளன.
என்ன இருந்தாலும் எகிப்தை விட சூடானில் அதிக அளவிலான பிரமிடுகள் இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்…
உலகின் மிகச் சிறிய பாலூட்டி தேனீ வௌவாலா ..!
தேனீ வௌவாலை (Bumblebee bat) கிட்டி பன்றி மூக்கு வௌவால் (kitty pig nose bat) என்றும் அழைப்பார்கள்.

இது மேற்கு தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு மியான்மர் பகுதிகளில் காணப்படுகிறது.
இது அங்குள்ள ஆற்றங்கரைகளில் உள்ள சுண்ணாம்பு குகைகளில் வாழ்ந்து வருகிறது பூமியின் மிகச்சிறிய உயிரினமாகிய தேனீ வௌவால்.
சுற்றுச்சூழலில் மிகப் பெரிய பங்கும் இது வகிக்கிறது.
இந்த தேனீ வௌவால்களுக்கு தலை முதல் உடல் நீளம் 1.14 முதல் 1.29 அங்குலங்கள் மற்றும் 5.1 முதல் 5.7 அங்குல இறக்கைகள் வரை இருக்கும்.
இந்த தேனீ வௌவால் தான் உலகின் சிறிய பாலூட்டி இனம் ஆகும்.
இரவில் மட்டுமே கண் தெரியும் இந்த வௌவால்களை பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது அல்லவா..
ஒரு குழந்தையின் சுற்றோட்ட அமைப்பு 60,000 மைல்களுக்கு மேல் நீளமானதா ..!
மனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய பகுதிகள் இதயம், நுரையீரல், குருதி, குருதிக் கலங்கள் ஆகும் .

ஒரு முதிர்ந்த மனிதனின் உடலில் சராசரியாக 4.7 – 5.7 லிட்டர் இரத்தம் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும்.
இது கிட்டத்தட்ட மனித உடல்நிறையின் 7% ஆக கருதப்டுகிறது.
மேலும் இந்த சுற்றோட்ட அமைப்புடன் இணைந்து, இரத்த ஓட்ட அமைப்பும் செயல்படுகிறது.
ஃபிராங்க்ளின் இன்ஸ்டிடியூட்(Franklin Institute) படி, “ஒரு குழந்தையின் முழு சுற்றோட்ட அமைப்பானது அதன் நரம்புகள், தமனிகள் மற்றும் நுண்குழாய்கள் தட்டையாக அமைக்கப்பட்டிருந்தால், நிச்சயம் அது 60,000 மைல்களுக்கு மேல் நீளமாக தான் இருக்கும்” என்று கூறப்படுகிறது.
மனித உயிர் அரியது.. அதை காக்கும் இரத்தமோ அதை விட சிறந்தது தானே..
மனித உடலில் இரத்த நாளங்கள் இல்லாத இரண்டு பாகங்களில் கார்னியாவும் ஒன்றா..!
கார்னியா என்பது கண்ணின் தெளிவான மேற்பரப்பு ஆகும். இது கண்மணி மற்றும் கண்ணின் பிற பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

மேலும் கண்ணுக்குள் நுழைவதற்காக கார்னியா ஒளி கவனம் செலுத்துகிறது.
குருத்தெலும்பு மற்றும் கார்னியா ஆகியவை மனித உடலில் இரத்த நாளங்களைக் கொண்டிருக்காத ஒரே வகையான திசுக்கள் என்று, ஹார்வர்ட் (Harvard)கண் மருத்துவத் துறையின் ஸ்கீபன்ஸ்(Schebens) கண் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஓவியத்தை போன்ற இருவரி கவிதை தான் நம் கண்கள்…
Also Read: Asteroid: பூமியை நெருங்கும் 62,084கி.மீ வேக சிறுகோள் – NASA தகவல்..!
உங்களுக்கான கேள்விகள் :
கேள்வி : வட்ட வடிவில் இருப்பேன், என்னை சுழற்றலாம் நான் யார் ?
விடை : சக்கரம்
கேள்வி : முக்கோண வடிவில் இருப்பேன் என்னை கண்டு வியப்பார்கள், நான் யார் ?
விடை : பிரமிடு
கேள்வி : தலைகீழாக தொங்கும் பறவை எது?
விடை : வௌவால்
கேள்வி : இவன் ஓடவில்லை என்றால் அசைவே இல்லை, அவன் யார் ?
விடை : இரத்தம்
கேள்வி : சிறு துளி விழுந்ததும் குளமே கலங்கியது என்ன ?
விடை : கண்மணி