இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Late Night Food: இரவு நேரங்களில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா..?

Late Night Food: இரவு நேரங்களில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா..?

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இரவு நேரங்களில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று, பல சந்தேகங்கள் இருந்து வருகிறது. அதைப்பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

Late Night Food

Late Night Food:

அனைத்து உணவு நிபுணர்களும் பருப்பு வகைகளை உணவு உண்பதற்கு எந்த கட்டுப்பாடும் பெரிய அளவில் விதிப்பதில்லை.

ஆனால் பருப்பு வகைகளில் அதிகமான கலோரிகள் இருப்பதால் இரவில் பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்று பலருக்கும் குழப்பங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது.

ஒரு கப் பருப்பில் எத்தனை கலோரிகள் இருக்கிறது அதை சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருக்கிறது.

இரவில் பருப்பு சாப்பிடலாம் ஆனால் சிறிய அளவில் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளலாம்.

High Calories Food:

பாசிப்பருப்பு ஓரளவுக்கு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியது. இரவு நேரங்களில் அனைத்து விதமான உணவு வகைகளையும் சாப்பிடலாம் ஆனால் இரண்டு விதமான கட்டுப்பாடுகளை நமக்கு நாமே நிச்சயமாக வகுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக உடல் எடை குறைப்பவர்கள் ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்கள் நிச்சயமாக இந்த இரண்டு கட்டுப்பாடுகளை அவருக்கு அவரே வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும்.

இரண்டாவது முக்கியமான கட்டுப்பாடு இரவு நேர உணவை (Healthy Night Food)மிகவும் லேசான உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் சேர்த்து மிகவும் அதிகமான உணவை உட்கொள்வதே குறைத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற உணவுகளை இரவு குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் சீஸ் பட்டர் நெய் அதிகமான இறைச்சி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

Also Read: Hibiscus டீ குடிச்சா உடம்புக்கு இவ்வளவு நன்மைகளா..?

இரவில் குறைவாக சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *