Oil Massage: நீங்க தலைக்கு இப்படியா எண்ணெய் தேய்குறீங்க..?
Oil Massage: நீங்க தலைக்கு இப்படியா எண்ணெய் தேய்குறீங்க..?
நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த பராமரிப்பு மிக அவசியமான ஒன்றாகிறது.
நாம் கூந்தலுக்கு செய்யும் பெரிய பராமரிப்பு பணி தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் என்று பலர் எண்ணுகின்றனர்.
ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. வழிய வழிய எண்ணெய் தேய்த்து, சீவி கொண்டால் முடியே கொட்டாது என்று எண்ணுவது முட்டாள்தனம்.

கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது.
அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.
அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்.
அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.

கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டுவிட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும்.
நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப்படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும்.
தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும்.
இதற்கு மேல் எண்ணெய் பசை தலையில் இருக்குமேயானால், அவை கூந்தலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தக்கூடும்.
இதுப்போன்ற அதிகப்படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது.

பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே Hair Oil Massage செய்ய ஆரம்பித்து விடுவர்.
அப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். முதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிக் கொள்ளவும்.
தலையை சீவி பிறகு எண்ணெய் தேய்ப்பதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, வேர்கள் வலுபெற்று, கூந்தலையும் ஆரோக்கியமாக வளரச் செய்யும்.
Also Read: வீட்டுக்குள்ளிருக்கும் காற்று மாசுபாட்டை எப்படி சமாளிப்பது..?
பெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர்.
இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
மேலும். எண்ணெயால் கிடைக்கக்கூடிய ஈரப்பதமும் முழுமையாக கிடைத்திடும். அதுமட்டுமல்லாது, இப்படி எண்ணெய் தேய்த்தால் பொடுகு தொல்லை எனும் பேச்சுக்கே இடமிருக்காது.