News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்மூலிகைகள்

Urinary Infection : சிறுநீரக கோளாறை சரிசெய்யும் நெருஞ்சி..!

Urinary Infection : சிறுநீரக கோளாறை சரிசெய்யும் நெருஞ்சி..!

நெருஞ்சி என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடி ஆகும். நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் செல்லும்.

இந்தத் தாவரம் முழுவதிலும் வெள்ளை நிற ரோம வளர்ச்சி காணப்படுகிறது . இதன் மலர்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.

Urinary Infection

Nerunji Mull:

பெரும்பாலும் இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. தமிழககத்தில் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் முடியும்.

நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் போன்ற அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தது.

மேலும் இது பட்டுத்துணிகளைச் சுத்தப்படுத்துகிறது, இந்த நெருஞ்சி நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு மற்றும் கறைகள் அனைத்தும் நீங்கும்.

எந்த இரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையிலே பட்டு போன்ற துணிகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கிறது.

மருத்துவ பயன்கள்:

இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கிறது , இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் காணப்படுகிறது.

அதன் இலைகளை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் போட்டால் , தண்ணீரின் அடர்த்தி அதிகரித்து கெட்டியாகி எண்ணெய் போல பிசுபிசுப்பு ஆகிவிடும். ஆனால் இதுவும் ஒரு மருந்துதான்.

நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் போன்றவற்றை நீக்குகிறது.

உடல் எரிச்சல், வெண் புள்ளி, மேகம் போன்ற கோளாறுகளையும் தீர்க்கிறது.

How To Improve Male Fertility ?

ஆண்மை பெருக :

நம்மிடையே உள்ள பல ஆண்மையை மேம்படுத்தும் மருந்துகள் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நெருஞ்சில் விதையை பாலில் ஊறவைத்து பொடியாக்கி காலை மாலை கொடுக்கலாம்.

நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி ஒரு கைப்பிடி அருகம்புல் சேர்த்து சட்டியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராக கொதிக்க வைத்து குடிநீராக பயன்படுத்தலாம்.

வெள்ளாட்டு பாலுடன் நெருஞ்சி இலையைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்துவர ஆண்மையை அதிகரிக்கலாம்.

கண் எரிச்சல் குணமடையும்:

50 மி.லி அளவு இரு வேளை மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் சூடு, கண் எரிச்சல் மற்றும் கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்றவை குணமாகும்.

பெண்களுக்கு நிவாரணம்:

நாள்பட்ட வெள்ளை படுதலுக்கு கருஞ்சீரகத்தின் பழம் மற்றும் இதன் வேரை சம அளவு எடுத்து புளியுடன் கலந்து கஞ்சி செய்து குடித்து வர குணமாகும்.

மஞ்சள் காமாலைக்கு நிவாரணம்:

கீழாநெல்லி வேர் மற்றும் நெருஞ்சி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சூடு தண்ணீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.

Urinary Tract Infection Treatment:

குழந்தை வரம் தரும் நெருஞ்சி:

பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவது மட்டுமின்றி, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகையாகும்.

சிறுநீர் கோளாறுகள்:

இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீரை பெருக்கி நாம் உண்ணும் உணவில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியேறுகிறது. இதன் மூலம் உடலில் தேவையற்ற கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.

ஒரு சிறிய குடத்தில் இலைகளைப் பறித்து அரை லிட்டர் சாறு எடுக்கவும். கீழாநெல்லி இலைகளை எடுத்து அரை லிட்டர் சாறு எடுக்கவும். இரண்டையும் கலந்து அதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்தவும்.

இதனுடன் சுருபீலா வேர், சிந்தி இலை, வில்வ இலை, தென்னம்பல அரிசி ஆகியவற்றை சம அளவு கலந்து வைத்துக் கொள்ளவும்.

Also Read: How to Grow Hair Faster: மணத்திற்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலை நமக்கு தரும் நன்மைகள் பற்றி தெரியுமா?

இவற்றை தேனில் கலந்து கால் ஸ்பூன் சாப்பிட்டு வர, நீர்ப்பிடிப்பு, நீர் எரிச்சல், நீர் அடைப்பு, சதை அடைப்பு, கல் அடைப்பு, சிறுநீரில் ரத்தம், சிறுநீரில் சீழ், ​​அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரகச் செயல்பாடு குறைதல் போன்றவை நீங்கி சிறுநீரகம் நன்றாகச் செயல்படும்

டயாலிசிஸ்(Dialysis) செய்து லட்சக்கணக்கில் பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்காதீர்கள்.