Healthy Snacks: பிஸ்கட்டில் ஏன் இத்தனை ஓட்டைகள்? சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா?
Healthy Snacks : பிஸ்கட்டில் ஏன் இத்தனை ஓட்டைகள்? சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா?
பிஸ்கட் என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு தின்பண்டம் ஆகும்.

Healthy Snacks:
நாம் இவ்வளவு காலமாக பிஸ்கட்டில் இருக்கும் ஓட்டைகள் அழகுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், இவ்வெண்ணம் தவறாக மாறிவிட்டது.
டீ, காபியுடன் சேர்த்து பிஸ்கட் சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அத்தகைய பிஸ்கட்டின் சந்தை மதிப்பு என்பது பல ஆயிரம் கோடிகள் ஆக உள்ளது.
காலம் மாறும்போது பிஸ்கட்டுகளும் பல சுவை வேறுபாட்டுடன் உருவாகத் தொடங்கின.
குழந்தைகளுக்கு பிடித்தமான பிஸ்கட், நீரிழிவு நோயாளிகளுக்கான பிஸ்கட் என பல பிஸ்கட் வகைகள் வந்துவிட்டன.
ஆனால், எத்தனை பிஸ்கட்டுகள் வந்தாலும், அவற்றில் துளைகள் இருப்பதை நீங்கள் கட்டாயம் பார்த்திருக்க முடியும். அது ஏன்?என்ற கேள்வி நம் மனதில் உருவானதே இல்லை.
அழகுக்காக வடிவமைக்கப்பட்டது என எண்ணியுள்ளோம். ஆனால் அது தவறு.
பிஸ்கட்டுகளுக்கு நடுவே ஓட்டைகள் அமைக்கப்படுவதற்கு பின்னால் அறிவியலும் இருக்கிறது.
பிஸ்கட்டின் துளைகள் டாக்கர்ஸ்(dockers) என அழைக்கப்படுகிறது.
இந்த துளைகள் பேக்கிங்கின்போது காற்று செல்வதற்காக ஏற்படுத்தப்படுகிறது.
பிஸ்கட் உருவாக்கப்படும்போது வெப்பத்தில் அதன் அளவு மாறாமல் இருப்பதற்கும் இந்த துளைகள் ஓர் காரணமாக உள்ளன.
ஒருவேளை ஓட்டைகள் இல்லாமல் பிஸ்கட் செய்ய முற்பட்டால், அவை சரியான வடிவமைப்பில் கிடைக்காது அல்லது உடைய வாய்ப்பிருக்கிறது.
அதிகமான பிஸ்கட்டுகள் ஒரே சூட்டில் வைத்து பேக்கிங் செய்யப்படும்போது, அதில் இருக்கும் காற்று முறையாக வெளியேறிவிட்டால், பிஸ்கட் அளவு மாறாமலும், உடையாமலும் இருக்கும்.
சுருக்கமாக சொன்னால், பிஸ்கட்டில் இருக்கும் சூடு வெளியேறுவதற்காகவே அந்த துளைகள் இடப்படுகின்றன.
பிஸ்கட் சாப்பிடுவதன் விளைவுகள்:

இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தய்மார்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் பிஸ்கட்டை உணவாக கொடுக்கின்றனர்.
இந்த பிஸ்கட் மிருதுவாகவும் அழகாகவும் இருப்பதற்கு அதில் சர்க்கரை, சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் சோடியம் பைகார்பனேட் போன்ற நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.
பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிக புரதச்சத்து வாய்ந்தது.
மிருதுத்தன்மை குறைந்து இருந்தால் அதில் கொழுப்பு சத்து நிறைந்து இருக்கிறது என்று அர்த்தம்.
பிஸ்கட்டுகள் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு அதில் ஹைட்ரஜனேட் சேர்க்கப்படுகிறது.
இதனால் குழந்தைகளுக்கு ஒபிசிட்டி(obesity) போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் அவை செரிமானம் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்ளும்.
எனவே, குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது.
இதனால் மற்ற உணவுகள் சாப்பிடுவதை குழந்தைகள் தவிர்த்துவிடுவார்கள்.
சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள்(flavours) மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது.
அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
மேலும், குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுத்த காரணமாக உள்ளது.
இது மலச்சிக்கல் மற்றும் மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
எனவே, குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக் கொடுப்பதே ஆரோக்கியத்தை கொடுக்கும்.
Also Read: Tasty ladoo recipe: பெண்களுக்கு சோர்வடையாமல் வேலை செய்ய தினமும் இந்த 1 லட்டு சாப்பிட்டாலே போதும்..!
இதன் மூலம் வளரும் குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா கெட்டதா என்பதை அறிந்து செயல்படுங்கள்.