News Tamil OnlineThatstamil Newsஅறிவியல்செய்திகள்

Animal Facts: ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடைக்கொண்ட ராட்சத தேரையா..!

Animal Facts: ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடைக்கொண்ட ராட்சத தேரையா..!

ஆஸ்திரேலியாவின் வடக்கு மழைக்காடு பகுதியில் ராட்சத கேன் தேரை(Cane toad) ஒன்றை கண்டெடுத்தனர். முதலில் அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அதை தேரை என்றே நம்பவில்லை.

நாம் காணும் மற்ற கேன் தேரைகளின் அளவை விட இந்த ராட்சத தேரையின் அளவு ஆறு மடங்கு பெரியதாக இருந்தது.

Animal Facts newstamilonline

What is the biggest toad in the world?

சுமார் இரண்டரை கிலோவுக்கும் அதிகமான எடையில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த வகை தேரை இதுவரை உலகில் கண்டிராத தேரைகளை விட மிகவும் பெரியதாக கருதப்படுகிறது.

வனத்துறை அதிகாரிகளால் தற்போது இந்த தேரை காட்டிலிருந்து எடுத்து வரப்பட்டது.

1935ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக இந்த வகையான தேரைகள் ஆஸ்திரேலியாவிற்குள் கண்டெடுக்கப்பட்டன.

ஆஸ்திரேலிய நாட்டை பொறுத்தவரை இன்றுவரை தேரைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கும் உயிரினமாகவே கருதப்படுகிறது.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி ஆஸ்திரேலியாவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான தேரைகள் இருந்து வருகின்றன.

குயின்லாந்து காட்டுப்பகுதியில் வனத்துறை அதிகாரி கைலி கிரே இந்த ராட்சத தேரையை முதல்முறையாக பார்த்தபோது அவரது கண்களையே அவரால் நம்பமுடியவில்லை..!

Animal Facts:

ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் பேசிய அவர், ‘இவ்வளவு பெரிய அளவில் இதுவரை நான் தேரைகளை பார்த்ததில்லை’ என தெரிவித்தார்.

Cane toad Australia

அது கிட்டதட்ட ஒரு கால்பந்து அளவிலான உருவில் பெரிதாக காணப்படுகிறது என்று கூறினார்.

அதை உடனடியாக பிடித்த வனத்துறை அதிகாரிகள் குழு, அந்த தேரை பெண்ணாக இருக்க வேண்டுமென நினைத்தனர்.

அந்த தேரையை தூக்கி எடை பார்க்க முயற்சி செய்தனர். அது அதிக எடைக்கொண்டதாக இருந்தது.

அப்போது அவர்கள் அது தனது எடையினால் உலக சாதனை படைக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஸ்வீடன் நாட்டில் செல்லப்பிராணியாக வளர்ந்த பிரின்சன் என்னும் தேரைதான் தனது எடையினால் முதலில் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.

அந்த தேரையின் மொத்த எடை 2.65 கிலோவாக இருந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலிய காட்டிற்குள் கண்டெடுக்கப்பட்ட இந்த தேரையின் எடை 2.7 கிலோவாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு மனிதக் குழந்தையின் எடைக்கு நிகராக இருக்கும்.

Cane toad Australia:

இதை குறித்து பேசிய வனத்துறை அதிகாரி கிரே, “இந்த தேரை அதிக அளவிலான பூச்சிகளையும், ஊர்வனங்களையும் மற்றும் சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகளையும் தனது உணவாக சாப்பிட்டு வந்திருக்கும்” என்று கூறினார்.

இந்த தேரை தன்னுடைய வாயில் எவ்வளவு பெரிய இரைகளை எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு பெரிய இரைகளை அது உணவாக எடுத்து வந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று ஆஸ்திரேலிய காடுகளில் இயற்கையாக வேட்டையாடும் இனங்கள் என்று எதுவும் இல்லை.

இந்த நிலையில் நச்சுதன்மை வாய்ந்த இத்தகைய இனங்கள் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கினங்களை அழித்து வருவதாகக் கருதப்படுகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட இந்த ராட்சத கேன் தேரை எத்தனை வயதுடையதாக இருக்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

பொதுவாக தேரைகள் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆகையால் இந்த ராட்சத கேன் தேரை நிச்சயம் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தேரையாகத்தான் இருக்கும் என்கிறார் கிரே.

Also Read: Future Of Artificial Intelligence: ஏலியன் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது நடப்பது என்ன ?

இந்த ராட்சத தேரை தற்போது கருணைக்கொலை செய்யப்பட்டுவிட்டது. மேலும் ஆஸ்திரேலியாவில் இதுப்போன்ற உயிரினங்களுக்கு வழங்கப்படும் வழக்கமான நடைமுறைப்படி இந்த தேரையின் உடல் குயின்லாந்து அருங்காட்சியத்திற்கு கொடுக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.

மிகவும் விஷமான இந்த தேரைகளால் பல உயிரினங்கள் அழிவது உண்மை என வனத்துறை அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.