இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Black Tea Benefits: தினமும் ப்ளாக் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..!

Black Tea Benefits: தினமும் ப்ளாக் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..!

கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது.

ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என்றே கூறப்படுகின்றது.

Black Tea Benefits tea cup - newstamilonline

Black Tea Benefits:

ஒரு நாளுக்கு 4 கப் என்ற விகிதத்தில் ஒரு மாதம் தொடர்ந்து ப்ளாக் டீயைக் குடித்து வந்தால், நரம்பு மண்டலங்கள் வலுவாக்கிவிடும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ப்ளாக் டீ அருந்துவதால் கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுப்பதுடன், பல இதய நோய்களுக்கு தீர்வாகின்றது.

ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அடித்துத் துவம்சம் செய்வதோடு மட்டுமில்லாமல், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவி செய்கின்றது.

பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்களை ப்ளாக் டீயிலுள்ள டானின் மற்றும் பாலிஃபீனால்கள் அழிக்கப்படுகின்றது.

வாய் துர்நாற்றமும் ப்ளாக் டீயைக் குடிப்பதால் நீங்கிவிடும். வாய் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபுளோரைடுகளை 2 கப் ப்ளாக் டீயில் நாம் பெற்று விடலாம்.

Black Tea Benefits tea - newstamilonline

செரிமானத்திற்கு ப்ளாக் டீயில் உள்ள டானின் உதவி செய்கின்றது.எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்கவும் ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் பயன்படுகின்றது.

ப்ளாக் டீயில் உள்ள காப்ஃபைன் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கும்.

ப்ளாக் டீயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால், அதைக் குடிக்கும் போது உடல் எடை தானாகவே குறையத் தொடங்கும்.

நம் உடலில் உள்ள ட்ரைக்ளிசரைடுகளின் அளவு ப்ளாக் டீயைக் குடிப்பதால், குறைந்து, தேவையில்லாத கொழுப்புச் சத்துக்களும் நீங்கி விடும்.

​பிளாக் டீயின் ஊட்டச்சத்து அளவுகள்:

ஆராய்ச்சியாளர்கள் கறுப்பு தேநீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் குறைக்க உதவக்கூடும் . பிளாக் டீ பெண்களுக்கு மிகச் சிறந்த ஒன்று.

1 கப் பிளாக் டீயில்

கலோரிகள் – 2.4

கார்போஹைட்ரேட்டுகள் – 0.4 கிராம்

நார்ச்சத்துக்கள் – 0.1 கிராம்

கொழுப்புகள் – 0 கிராம்

புரதங்கள் – 0.1 கிராம்

உடல் எடையை குறைக்க பிளாக் டீ:

ஒரு கப் பிளாக் டீயை வொர்க் அவுட் செய்வதற்கு முன்பு குடிப்பது உங்கள் உடற்பயிற்சி திறனை அதிகரித்து எடையை குறைக்க மிகவும் அதிகமாக உதவுகிறது. பிளாக் டீ தெர்மோஜெனீசிஸ் உடல் வெப்பநிலையை அதிகரித்து கொழுப்பை குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை குறைக்கிறது:

வயதானவர்களுக்கு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு 70% குறைவாக இருப்பதாகக் நீண்ட காலத்திற்கு பிளாக் டீ அருந்தியவர்களுக்கு காட்டியது.

Also Read: கோடை காலத்தில் Sugarcane Juice..! குடிப்பதால் என்ன நன்மைகள்..!

எனவே பிளாக் டீயை நீரிழிவு நோயாளிகள் எடுத்துத்துக் கொள்வது நல்லது.