Tamil Newsஇந்தியாஉலகம்செய்திகள்தொழில்நுட்பம்

Aarogya Setu App: ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானதா..?

Aarogya Setu App: ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானதா..?

கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்க மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானதா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டுள்ளது.

Aarogya Setu App - newstamilonline

Aarogya Setu App:

கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதை பதிவிறக்கம் செய்தால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நபரின் விவரத்தை உடனடியாக காட்டும்.

மேலும், கொரோனா இருக்கிறதா என்பதையும் அறிகுறிகளை பதிவிட்டு, உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். இந்த செயலி குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதுவரை 9 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதன்மூலம் உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் ஆரோக்ய சேது 7-ம் இடம் பிடித்துள்ளது

இனி புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஆரோக்கிய சேதுவின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

செல்போனின் Bluetooth மற்றும் GPS லொகேஷனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதால் பயனாளர்களின் நகர்வுகளை கண்காணிக்க முடியும் என புகார் எழுந்துள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள் பொறுப்பு பதவி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேங்களை எழுப்புவதாக உள்ளது.

எனினும் ஆரோக்கிய சேது நம்பகத்தன்மை வாய்ந்ததுதான் என மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Also Read: மக்களின் சோர்வு அளவை அளவிட உதவும் ‘Hytech’ கழிப்பறை

தரவுகள் பாதுகாப்பாகாவே சேமிக்கப்படுவதாகவும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் இருந்தால் அது பற்றி gpportaarogyasetu@gov.in. என்ற இமெயில் முகவரியில் அரசுக்கு தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க உதவும் இ-பாஸ் வசதியை இதில் அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஆரோக்கிய சேதுவின் எதிர்காலத்தை இந்த சர்ச்சைகள் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றன.