Medicine for Acidity: பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் அப்ரமாஞ்சி மூலிகை..!
Medicine for Acidity: பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் அப்ரமாஞ்சி மூலிகை..!
அப்ரமாஞ்சி Valeriana wallichii என்று அழைக்கப்படுகிறது.
இந்த மூலிகைத் தாவரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது.

Valeriana Wallichii:
இத்தாவரத்தை மருந்திற்கு பயன்படுத்துவதற்காக மத்திய, மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும், இந்தியாவின் மேற்கு இமாலயம், மற்றும் காசுமீரிலும் பயிரிடப்படுகிறது.
அப்ரமாஞ்சி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400–2700 மீட்டர் உயரத்தில் வளருகின்றது.
அப்ரமாஞ்சி தாவரத்தின் பேரினப்பெயர் லத்தின் மொழியில் ‘நலம் தருவது’ என்னும் பொருள் கொண்டதாகும்.
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், இத்தாவரத்தின் மருத்துவ குணங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், 1952-ம் ஆண்டில் தாவர மருந்துகள் பற்றிய நூலினை வெளியிட்டவர் ஃபெரியஸ் காலுமினா.
இவர் தனக்கிருந்த வலிப்பு நோயினை இத்தாவரத்தின் மூலம் குணப்படுத்திக் கொண்டதாக அந்நூலில் தெரிவித்துள்ளார்.
அப்ரமாஞ்சி தாவரம் ஈரமான இடங்களில் இயற்கையாக வளரும் தன்மைகொண்டது.
பெரும்பாலும் இத்தாவரம் மருந்திற்காக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பெரிதும் பயிரிடப்படுகிறது.
மேற்கு இமாலயத்திலும், காஷ்மீரிலும் 2400-2700 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.
Medicine for Acidity:
முதலில் விதைகள் மூலம் வசந்த காலத்தில் பயிரிடப்படும் இத்தாவரத்தின் தரையடித்தண்டு 2 ஆண்டுகளுக்குப்பிறகு இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படுகிறது.
இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் மற்றும் போர்னைல் அசிடேட், பீட்டர் கேரிபில்லின், இரிடாய்டுகள், வெலிபோட்டிரியேட்கள், வால்டிரேட், ஐசோவால்டிரேட் மற்றும் ஆல்கலாய்டுகள், போன்ற வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன.
இதன் தரையடித்தண்டு மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் உடையவை.
இதன் தரையடித்தண்டும் மாற்றும் வேரினை வைத்து வெலிரியன் என்னும் மருந்து தயாரிக்கப்படுகிறது.

How to Reduce Stomach Pain during Periods Instantly?
மேலும் இதன் மருத்துவக்குணம் தூக்கத்தை தூண்டும், தசையிறுக்கத்தை தளர்த்தி சுகமளிக்கும்.
படபடப்பு மற்றும் வலியுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
Also Read: Home Remedies For Gastric: ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
இது மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகிறது. அஜீரணத்தை போக்கும், காய்ச்சல், மனஇறுக்கம், மனநோய், நரம்பு தளர்ச்சி, பயஉணர்வு முதலிய நோய்களை போக்குவதற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் மெனோபாஸ் சிக்கல்களை போக்குவதற்கு ஓர் சிறந்த மருந்தாகவும் உதவுகிறது.