இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Eating Food: வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..?

Eating Food: வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..?

உடல் எடை குறித்த விழிப்புணர்வு இன்று எல்லோருக்குமே அதிகரித்துள்ளது. இதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள், கலோரி குறைவாக இருக்கும் உணவுகள், தினமும் உடற்பயிற்சி என உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கின்றனர்.

Fast eating problems - newstamilonline

Eating Food:

உடல் எடை அதிகரிக்க, நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதைவிட, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதே முக்கியக் காரணம்.

இப்போதெல்லாம் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதே அரிதாக இருக்கிறது. அப்படி சாப்பிட்டாலும், வேகமாக சாப்பிட வேண்டிய சூழல் அல்லது கட்டாயம் ஏற்படுகிறது.

இப்படி வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

வேகமாக சாப்பிட்டால், சாப்பிட்டதற்கான திருப்தியே இருக்காது. நிறைவான உணவாகவும் இருக்காது.

ஆனால் வயிறு நிறைந்த உணர்வு மட்டும் இருக்கும். இவ்வாறு நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள் எனில், அதற்குக் காரணம், மூளைக்குக் கட்டளையிடப்பட்டு அது வேலை செய்வதற்கு முன்னரே எல்லாம் முடிந்துவிடுவதுதான் காரணம்.

இதனால் கலோரிகள் அதிகமாகின்றன. இதற்கு போதுமான ஆற்றல் இல்லாதபோது அவை கொழுப்பாகச் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் எடை மட்டுமின்றி நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, இதயப் பிரச்னை, அஜீரணம் போன்ற நோய்களும் வரும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

எப்படி சாப்பிட வேண்டும்?

இதுகுறித்து செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், ஒரு வாய் உணவை குறைந்தது 20 முறையாவது மென்று சாப்பிட வேண்டும்.

Also Read: லிபோசோமால் வைட்டமின்கள் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்..?

அப்போதுதான் அந்த உணவின் ருசி, மணம் மூளைக்குச் சென்று திருப்தி கிடைக்கும். இந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் நீங்களே நினைத்துப் பார்க்காத வகையில், உங்கள் உடல் எடை குறையும் என்கிறது ஆய்வு.