Sinus Infection: சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு வீட்டிலேயே இருக்கும் தீர்வு..!
Sinus Infection : சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு வீட்டிலேயே இருக்கும் தீர்வு..!
சைனஸ் பிரச்சனையும் பருவ நிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி போன்ற சாதாரண உடல் உபாதையே. அதற்காக அதை கண்டுகொள்ளாமல் அப்படியே விடுவதும் தவறு.

மூக்கின் காற்று துவாரங்களில் பாக்டீரியா தொற்று, தூசிகள், புகை மாசுபாடு அடைத்துக் கொண்டிருந்தால் சைனஸ் பிரச்னை வரும்.
சைனஸ் வந்தால் குறந்தது 10 – 12 நாட்கள் நீடிக்கும் அல்லது ஒரு வாரமேனும் தொடரும்.
இதற்கான சிலர் மருத்துவ சிகிச்சைகள், மாத்திரைகள் எடுத்துக்கொள்வார்கள். இது தற்காலிகப் பிரச்னை என்றாலும் அடிக்கடி வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. சைனஸ் வர காரணமாக இருக்கும் விஷயங்களை தவிர்ப்பதே இதற்கான தீர்வு.
இருப்பினும் சைனஸ் வந்தால் உடனே வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
Sinus Infection:
ஆப்பில் சிடர் வினிகர் : சைனஸ் இருக்கும் நாட்களில் வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பில் சிடர் வினிகரை கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் துவாரங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை குறைக்கும்.
ஆப்பில் சிடர் வினிகரில் ஆண்டி பாக்டீரியா, ஆண்டி ஃபங்கல் போன்றவை இருப்பதால் நல்ல பலன் தரும்.

தேன் : ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் தொண்டை வலி, மூக்கடைப்பு பிரச்னை நீங்கும்.
தண்ணீர் : உடலை பராமரிப்பதில் முக்கிய பங்கு தண்ணீருக்கு உண்டு. எனவே உடலை ஹைட்ரேட்டடாக வைத்துக்கொள்ள தண்ணீரை அதிகமாக குடியுங்கள்.
அடிக்கடி ஹெர்பல் டீ குடிப்பதாலும் நல்ல ரிலாக்ஸாக இருக்கும்.
மஞ்சள் : தொண்டை வலிக்கு இஞ்சி டீ குடிக்கிறீர்கள் எனில் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடியுங்கள். அதில் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் தன்மை அதிகம் உள்ளன.
சூப் : சிக்கன் சூப், மட்டன், வெஜிடபுள் சூப் என உங்களுக்கு பிடிந்த எந்த சூப்பாக இருந்தாலும் சூடாக குடித்தால் அடைப்புகள் அகலும். சைனஸ் வலி, அழுத்தங்கள் இருந்தாலும் நல்ல ரிலீஃபாக இருக்கும்.
Also Read: Bamboo rice benefits: உங்கள் வீட்டிற்கு மூங்கில் அரிசியை கொண்டு வாருங்கள்..!
இவற்றைத் தவிர்த்து மூக்கடைப்பிற்கு பயன்படுத்தும் ஸ்ப்ரே, ஆவிப் பிடித்தல் போன்றவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம். வலி தீவிரமாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.