Thatstamil NewsToday Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Acidity Home Remedies: உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? அதை தடுக்க இதை செஞ்சா போதும்..!

Acidity Home Remedies : உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? அதை தடுக்க இதை செஞ்சா போதும்..!

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் நம் உடலில்  ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

Acidity Home Remedies

Acidity Home Remedies:

நம்முடைய பாரம்பரியமான உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்தப் பிறகு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து விட்டன.

நெஞ்செரிச்சல் என்பது நம் மார்பகத்திற்குப் பின் மார்பில் எரியும் உணர்வு வலி.

நம் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை மாற்றுவதன் மூலம், நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கலாம்.

நெஞ்செரிச்சல் ஏற்படக்காரணம்:

“நாம் சாப்பிடும் உணவு உமிழ்நீருடன் கலந்து முதற்கட்டமாக செரிமானம் ஆகும்,  பின்னர் உணவுக்குழாய் மூலமாக உணவு இரைப்பைக்குச் செல்லும்.”

உணவுக்குழாயில் மேல் முனையில் இருக்கும் கதவு நாம் சாப்பிடும் உணவை மூச்சுக் குழாய்க்குள் செல்வதை தடுக்கிறது.

இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை உணவுக்குழாய்க்கு கீழ் முனையில் இருக்கும் கதவு,  உணவுக்குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது.

இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த கதவுகளை கடந்து உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம்.

இரைப்பை அமிலம்:

உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு, மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால்  ‘தொளதொள’வென்று தொங்கிவிடும்.

இதனால் இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும்.

What is Ulcer?

‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு கிடையாது.

இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

யாருக்கெல்லாம் வரும் :

வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.

அடுத்ததாக அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

நெஞ்செரிச்சல் வராமல் தடுக்க  இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்தும் உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

தவிர்க்கும் முறைகள்:

நாம் சாப்பிடும் போது உணவினை மெதுவாக சாப்பிட வேண்டும்.

படுக்கைக்குச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே உணவை சாப்பிட வேண்டும்.ஏனென்றால் வயிறு முழுவதும்  நிரம்பிய நிலையில் படுப்பது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த பயன்படும் உணவுகளை காணலாம்:

ப்ரோக்கோலி மற்றும் அதன் இணை காய்கள் இரைப்பையில் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்தக்கூடியது. ப்ரோக்கோலியில் குறைவான அமிலமே இருக்கிறது என்பதால் இதனை வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்வது நல்லது.

அரிசி உணவு வகைகள் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் அது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது.

உடல் எடையை குறைப்பதாக எண்ணி முழுவதுமாக அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டாம்.

வாழைப்பழத்திற்கு  நெஞ்செரிச்சலை உடனடியாக குறைக்கும்  ஆற்றல் உள்ளது. இதற்கு இயற்கையாகவே அமில எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

இஞ்சி செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது, வெறும் வயிற்றில் தினமும் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு குறைக்கப்பட்டு உடல் எடை குறையும்.

அதே நேரத்தில் இஞ்சி அமிலச் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.  உணவையும் செரிக்க வைக்க உதவுகிறது.

இளநீரில் குறைந்தளவிலான கலோரிகள் இருப்பதால் இது உடலை குளர்ச்சியடையச் செய்யும். இளநீரில் இருக்கக்கூடிய பயோஆக்டிவ் என்சைம்கள் (Bioactive enzymes) உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

நெஞ்செரிச்சலை தவிர்க்க, சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடுவது நல்லது.

Also Read: Summer Juice Recipes: வெயில் காலத்தில் உடலுக்கு சக்தியை அள்ளித்தரும் தரும் பல வகை காய்கறி ஜூஸ்கள்..!

வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவினை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமற்ற வாழ்வை கைவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *