News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Jamun: நோய்களை குணமாக்கும் நாவல்பழம்..! நன்மைகளை அறிவோம் வாருங்கள்..!

Benefits Of Jamun: நோய்களை குணமாக்கும் நாவல்பழம்..! நன்மைகளை அறிவோம் வாருங்கள்..!

நாவல் பழமரம் ஒரு அற்புதம் நிறைந்த மரமாகும், இதிலுள்ள இழை, பட்டை, மரம், வேர், விதை என அனைத்துமே மருத்துவப் பலனை கொண்டுள்ளது.

Jamun Fruit Benefits

Benefits Of Jamun:

அதுபோன்று இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் C போன்ற  தாதுக்கள்  நிறைந்துள்ளன.

இந்த சிறப்புமிக்க பழத்தில் எவ்வகை நன்மைகள் நிறைந்துள்ளன என்பதை விரிவாக காணலாம்;

இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும் :

நாவல் பழம் ஆன்டி-டையாபடீக்(anti-diabetic) பண்புகள் நிறைந்த பழம். இதனை தினமும் உண்டு வருவதன் மூலம் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு  குறையும்.

அதிக அளவு நார்ச்சத்து:

நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இது நம்  உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும். எனவே நாவல் பழத்தினை உண்பதை தவிர்க்காதீர்கள்.

இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்:

நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் இரும்பு தாதுக்கள்  உடலின்  இரத்த உற்பத்தியினை அதிகரிக்கவும்  மற்றும் இரத்த சோகை நோய் வராமல் காக்கவும்  உதவுகிறது.

வைட்டமின் சி :

இதிலுள்ள வைட்டமின் சி ஆனது சரும ஆரோக்கியத்திற்கு மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.

மேலும்  வைட்டமின் சி மூட்டுகளில் உள்ள தசை நார் மற்றும் ஜவ்வின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கும்:

நாவல் பழத்தில் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது.

கால்சியமானது உணவுகளில் உள்ள சத்தினை உறிஞ்சுவதற்கு மிகவும் உதவியாக உள்ளது.

எனவே, நாவல் உண்பதன் மூலம் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

மேலும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.

புற்று நோயினை தடுக்க உதவும்:

இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் புற்று நோய் வராமல் காக்க உதவுகின்றது.

நாவல் மரத்தின் வேரும் பட்டையும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது.

How to Eat Jamun Seeds?

நாவல் பழத்தின் மீது சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள், நல்லமிளகு தூள், போன்றவற்றை சேர்த்து உண்பது நல்லது, அது உடல் ஜீரணத்திற்கு உதவும்.

அதுவே ஒரு நாவல் கொட்டையை சூரணமாக்கியோ, வேர், இலைகளைக் கஷாயம் வைத்தோ சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது.

நாவல் பழத்தில் இனிப்பு துவர்ப்பு ஆகிய இரு சுவையும் கலந்திருக்கும். நாவல் விதையில் அதிக துவர்ப்பு சுவை இருப்பதால் இது வாயுவை அதிகப்படுத்தக்கூடியது.

மேலும்,  நாவலின் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் நம் உடலின் கற்களானது கரைந்துவிடும்.

Also Read: Benefits Of Carrot Juice: கோடைவெயிலை விரட்டியடிக்க கேரட் ஜூஸ்யை இந்த மாதிரி குடிச்சி பாருங்க! சோர்வு பறந்து போகும்..!

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை மெலனினை செல்களாக செய்யத் தூண்டி சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு ஓர் சிறந்த பலனை அளிக்கிறது.

“இத்தகைய பழத்தின் நன்மையினை அறிந்து உட்க்கொள்வோம்,நோயினை தவிர்ப்போம்”.