இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Cucumber Benefits: வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன..?

Cucumber Benefits: வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன..?

வெள்ளரிக்காயில் அதிக நீர் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெள்ளரிக்காயை பொதுவாக மக்கள் கோடை காலங்களில் அதிகம் உண்ண எண்ணுவார்கள்.

cucumber benefits - newstamilonline

Cucumber Benefits:

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க இது சரியான உணவாக அமையும்.

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் காரணமாக கடுமையான மலச்சிக்கல் நோய் நீக்கும்.

இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. 

மேலும் இதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்க வெள்ளரிக்காவில் உள்ள சிலிகா என்ற கனிமம் பயன்படுகிறது . இது முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெள்ளரிக்காயில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.

வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம். தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நம் உடலை தொற்றுக்கிருமிகள் தாக்குவதை தடுக்கலாம்.

வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். இச்சமயங்களில் வெள்ளரிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்குகிறது.


நம் ஈறுகளில் உள்ள நோய்களை குணப்படுத்த வெள்ளரிக்காயில் உள்ள சாறு பயன்படுகிறது. மேலும் இது வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு குறைந்து கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் நம் உடலில் இதயத்திற்கு வர கூடிய மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த உறைதல் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.

மேலும், ரத்த அழுத்தம் சீரான அளவில்அமைய தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டுவந்தாலே போதும்.

Also Read: Cluster beans benefits: ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறி கொத்தரவரங்காய்..!

நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிடுவதனால் சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தன்மையை கொடுக்கிறது.