News Tamil OnlineTamil NewsTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Radish Leaf Benefits: முள்ளங்கி இலையின் பயன் அறியாமல் அதை தூக்கிப்போடுகிறீர்களா..? இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்..!

Radish Leaf Benefits: முள்ளங்கி இலையின் பயன் அறியாமல் அதை தூக்கிப்போடுகிறீர்களா..? இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்..!

முள்ளங்கியானது குத்துச்செடி வகையைச் சேர்ந்த ஒரு வகை கிழங்காகும். சிலர் முள்ளங்கிச் செடி கிழங்கல்ல, அது ஒரு வேர் அதை தான் கிழங்கு என்கிறோம் என்பர்.

Radish Leaf Benefits

White Radish Benefits?

உங்களுக்கு தெரியுமா! முள்ளங்கியில் அதன் கிழங்கு மட்டுமல்லாமல், இலை, தண்டு, விதை என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டதாகும்.

முள்ளங்கி கிழங்கின் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருக்கும் இலைகள் தான் முள்ளங்கிக் கீரை.

பெரும்பாலும் முள்ளங்கியை மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் கீரையை அலட்சியம் செய்து தூக்கி எறிகிறோம். ஆனால், இதன் இலைகளில் தான் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன‌.

முள்ளங்கியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு ‘வைட்டமின் C’ முள்ளங்கி கீரைகளில் அதிக அளவு உள்ளது.

100 கிராம் முள்ளங்கி கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது. இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.

புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் முள்ளங்கி கீரையில் அதிகம் நிறைந்துள்ளன.

முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையும் இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

மேலும் நீரிழிவு நோய்க்கு சிறந்த ஓர் மருந்தாக முள்ளங்கியின் கீரை செயல்படுகிறது.

Radish Leaf Benefits:

இந்த முள்ளங்கி கீரையின் நன்மைகள் என்ன என்பதை மேலும் விரிவாக காண்போம்;

< மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு. கூடவே வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

< சிறுநீரக கற்கள் கரைவதற்கு முள்ள‌ங்கி கீரையின் சாறு பயன்படும். தினமும் ஒரு ஐந்து டீஸ்பூன் அளவு கீரையின் சாற்றினை குடித்தால் போதும், நாளடைவில் கல் கரைந்து விடும்.

< மேலும், சிறுநீர்ப்பைகளில் வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம், அது மிகுந்த ஆற்றலை தரும்.

Radish Leaves Uses:

< சிறுநீர் சரியாக பிரியாமல் இருக்கும் பிரச்சனையில் உள்ளவர்கள், ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் எளிதில் பிரியும்.

< சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் போன்ற தோல் வியாதிகளை குணமாக்கும் ஆற்றலும் கொண்டது.

< ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டால் நீர் அடைப்பு தொல்லை நீங்கும்.

< தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

< இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது முள்ளங்கி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு சிறந்த பலம் தரும்.

< உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கி கீரையை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் கொழுப்பு படிவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

Also Read: Jamun Seed Powder Benefits: இந்த பழத்தின் விதைகள் நீரிழிவு நோய்க்கு மருந்தா! இதனை தவறவிடாதீர்கள்.

< கண்களில் பாதிப்பு உள்ளவர்கள், கண்பார்வை மேம்பட வேண்டும் என்று எண்ணுபவர்கள் முள்ளங்கி கீரையினை எடுத்துக்கொள்ளலாம்

குறிப்பு:

முள்ளங்கியினை மிதமான அளவில் உட்கொள்வதே நல்லது, ஏனெனில், சிலருக்கு அதிக அளவில் சாப்பிடும் போது செரிமான மண்டலம் பாதிப்பதாக கூறப்படுகிறது.

மிகவும் அரிதாக சிலருக்கு முள்ளங்கி சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகையைவர்கள் குறைந்த அளவு முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *