Body Odor: கோடை வெயிலின் வியர்வை நாற்றத்தை போக்கும் வெட்டிவேர் குளியல்! உங்களுக்கு தெரியுமா?
How to Reduce Body Odour? கோடை வெயிலின் வியர்வை நாற்றத்தை போக்கும் வெட்டிவேர் குளியல்! உங்களுக்கு தெரியுமா?
கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே தீ அனல் போன்று அடிக்கும் வெயிலும், வியர்வை வழியும் கொடுமையும் தொடங்கிவிடும்.
பருவ நிலை மாறும்போதே, ஒருசில நோய்களும் புதிதாக தோன்றிவிடுகின்றன.

Also Read: Clothes Worn in Summer: கொளுத்தும் வெயிலை உங்களிடம் நெருங்கவிடாத ஆடைகளா..! அது என்ன சம்மர் ஆடைகள்..!
வெட்டி வேர் பயன்கள்:
வெட்டிவேர்:
வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில், வெட்டிவேர் மூலிகைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. வெட்டிவேர் மருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்தது.
வெட்டிவேர் ஒரு வகை புல் இனத்தை சேர்ந்தது.
இதன் வளரும் உயரம் நான்கு முதல் ஐந்து அடிவரை இருக்கும்.
வெட்டி வேரின் பெயர் காரணம்:
இந்த வெட்டிவேரின் வேர் நெருக்கமாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் மீண்டும், அந்த புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வெட்டி வேரில் உப்பு, இரும்பு ஆக்சைடு, ரெசின், நிறமி, அமிலம், லைம், எளிதில் ஆவியாகும் எண்ணெய் போன்றவை உள்ளன.
சில காலநிலை மாறுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் இளமையில் முகங்களில் பருக்கள் வருவது சாதாரணமான ஒன்றாகும். ஆனால், அதிக வெப்பத்தால் சிலருக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும்.
அடிக்கடி முகங்களில் பருக்கள் தோன்றி கஷ்டப்படுவார்கள். இதற்கு வெட்டிவேர் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது.
இந்த வெட்டிவேர் முகப் பருக்களை போக்குவதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வெயில்காலங்களில் நம் தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் உருவாகும்.
இது போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வு வெட்டி வேர் குளியல் மாவில் இருக்கிறது.
வெட்டி வேர் குளியல் மாவு செய்முறை:
வெட்டிவேர்,சந்தனம், அகில், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், மகிழம் பூ, ஆவரம் பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, பச்சை பயறு, போன்றவை இந்த மாவிற்கு செய்ய தேவையானவை ஆகும்.
இவற்றை எல்லாம் நன்றாக மாவு போன்று அரைத்து நம் குளியல் நீரில் கலந்து குளித்து வந்தால்,
வெயிலினால் ஏற்படும், சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து சருமமும் அழகுடன் காணப்படும்.
Body Odor:
வெட்டி வேரின் நன்மைகள்:
வெயிலினால் வரும் சரும நோய்கள், வியர்குறு மற்றும் உடல் அரிப்பு போன்றவற்றிற்கு இந்த குளியல் மாவு சிறந்த பலனை அளிக்கிறது.
மேலும், வெட்டிவேர் மாவு நம் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பொலிவுடன் வைக்க உதவுகிறது.
வெயில் காலங்களில் நம் உடலில் வியர்வையினால் உண்டாகும் நாற்றத்தைப் போக்கி நல்ல நறுமணத்தையும்,உற்சாகத்தையும், தரக்கூடியது வெட்டிவேர்.
மேலும் வெயிலினால் உன்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.
இந்த வெட்டிவேர் இயற்கை குளியல் மாவானது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போன்ற அனைவர்க்கும் ஏற்றது.