Summer Juice Recipes: வெயில் காலத்தில் உடலுக்கு சக்தியை அள்ளித்தரும் தரும் பல வகை காய்கறி ஜூஸ்கள்..!
Summer Juice Recipes: வெயில் காலத்தில் உடலுக்கு சக்தியை அள்ளித்தரும் தரும் பல வகை காய்கறி ஜூஸ்கள்..!
நம் தினசரி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த தேர்வு , காய்கறி ஜூஸ் ஆகும்.

Also Read: Best Juice In Summer: சம்மர் வந்துவிட்டதா! சுட்டெரிக்கும் வெயிலை விரட்டியடிக்கும் எளியவகை ஜூஸ்கள்..!
How to Make Vegetable Juice?
ஏனெனில் இது நம் செல்களுக்கு ஊட்டச்சத்தினையும் மற்றும் தேவையான ஆக்ஸிஜனேற்றத்தினையும் வழங்குகிறது.
பொதுவாக அனைவரும் பழ ஜூஸ்களை தான் விரும்பி குடிப்பர். ஆனால் காய்கறி ஜூஸ்ஸின் நன்மைகள் பல இருந்தாலும், அது மிகவும் பிரபலமானது அல்ல.
பெரும்பாலான காய்கறி ஜூஸ்களில் இயற்கையாகவே தண்ணீர் அதிகம் உள்ளது. இது நாள் முழுவதும் உடல் சரியான நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது.
காய்கறி ஜூஸ் ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. அத்துடன் பல முக்கியமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
வெயில் காலங்களில் நம் உடலுக்கு தேவையான நீர்சத்தினை தரும் சில காய்கறி ஜூஸ்களின் செய்முறைகளை காணலாம்.
பச்சைக்காய்கறி ஜூஸ் :
இந்த ஜூஸ் நோய்களில் இருந்து நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தேவையான அளவு நீரினையும் வழங்குகிறது.
இதன் செயல்முறையை முதலில் பார்க்கலாம்;
தேவையான பொருட்கள்:
தக்காளி பழம் – 4
கேரட் – 1
தண்டு கீரை – 1
குடை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 5
தண்ணீர் – 1/2 கப்
கொத்தமல்லி இழை – சிறிதளவு
செயல்முறை:
தக்காளி, கேரட், தண்டு கீரை, குடை மிளகாய் போன்ற காய்கறிகளை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பின், பூண்டை இடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தக்காளி, கேரட், கீரை தண்டு, குடைமிளகாய், பூண்டை போட்டு தீயில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
காய்கறிகளை நன்றாக வேகவைத்த பிறகு 10 நிமிடங்கள் ஆற விடவும்.
பின்னர் அந்த காய்கறிகளை மிக்சியில்(mix) போட்டு விழுது போன்று அரைத்து கொள்ளவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை மற்றும் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
இந்த ஜூஸை பிரிஜ்ஜில்(fridge) சிறிது நேரம் வைத்து விட்டு குடிக்கவும்.
நோய் தொற்றுகளில் இருந்தும் சளி, இருமல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள இந்த ஜூஸ் உதவும்.
Summer Juice Recipes:
மிக்ஸ்டு வெஜிடபிள்(vegetable)ஜூஸ்:
தேவையான பொருட்கள்:
கேரட், தக்காளி – 3,
பீட்ரூட் – 1,
பாகற்காய் – சிறியது 1,
சுரைக்காய் – 1சிறியது
முட்டைகோஸ் – 25 கிராம்,
இஞ்சி – சிறிய துண்டு,
ஓமம் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சை ஜூஸ் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு, ஐஸ் கட்டிகள் – தேவைக்கு
செயல்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஓமத்தை ஊறவைக்கவும்.
பின், கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி போன்றவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் ஜூஸாக அரைக்கவும்.
இதனுடன், எலுமிச்சைச் சாறு, ஊறவைத்த ஓமம் தண்ணீர், மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் அரைக்கவும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கவும்.
எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, இந்த ஜூஸ் பயனுள்ளதாக உள்ளது.
Also Read: High Fiber Vegetables: நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..!
வெள்ளரி ஜூஸ்:
தேவையானவை:
½ -வெள்ளரி
2 -செலரி தண்டுகள்
2 கேல் இலைகள் (அல்லது 1 கப் கீரை)
1 பெரிய ஆப்பிள் (சிறியது அல்லது 1/2)
½ எலுமிச்சை (சாறு)
¼ துண்டு இஞ்சி
237 மிலி தண்ணீர்
செய்முறை:
முதலில் வெள்ளரி, செலரி, கேல் இலைகள் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை நீரில் கழுவவும். முட்டைக்கோஸ் இலைகளிலிருந்து தண்டுகளை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டிடவும்.
வெள்ளரிக்காய் , ஆப்பிள் மற்றும் செலரியை துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பிளெண்டர் ஜாரில்(blender jar) 1 கப் தண்ணீர் ஊற்றி வெள்ளரி, செலரி, ஆப்பிள் மற்றும் இஞ்சி சேர்த்து,மென்மையான கூழ் ஆகும் வரை கலக்கவும்.
இறுதியாக கேல்இலைகள், எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள்.
இது வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
கேரட் ஜூஸ்:
தேவையான பொருட்கள்:
கேரட் – 4
எலுமிச்சை – 1/2டீஸ் ஸ்பூன்
செயல்முறை:
முதலில் கேரட்டை அதன் தோலை நீக்கிவிட்டு, நீரில் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பின் கேரட்டை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து அருந்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.
Also Read: How to increase platelets: ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த எளிமையான உணவுகள் என்னென்ன?
கேரட் ஜூஸ் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்துவது நல்லது.
வெயில் காலங்களில் உடலுக்கு தேவையான குளிர்ச்சி பொருந்திய காய்கறி ஜூஸ்களை பருகி ஆரோக்கியத்துடன் இருங்கள்.