இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Eye Care: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!

Eye Care: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!

நம் பார்வையை மேம்படுத்த பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவுகின்றன என்ற உண்மையை கருத்தில் எடுத்துக்கொண்டு நாம் கேரட் மற்றும் பிற பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருகிறோம்.

goji berries benefits newstamilonline

ஆனால், நம்மில் பலர் அறியாத கரோடின் நிறைந்த உணவு ஓன்று உள்ளது. அதுவே கோஜி பெர்ரி.

இது வயது தொடர்பான பார்வை இழப்பைப் பாதுகாப்பதில் உதவியான ஒன்றாக உள்ளது.

Eye Care:

சமீபத்திய ஆய்வின்படி, உலர்ந்த கோஜி பெர்ரி ஆரோக்கியமான நடுத்தர வயதுடையவர்களில் வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் அல்லது ஏஎம்டியின் வளர்ச்சியைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மாகுலர் டிஜெனரேஷன் அல்லது விழிப்புள்ளிச் சிதைவு என்பது மாகுலா சேதத்தால் ஏற்படுகின்ற பொதுவான கண் நிலைமை ஆகும். இது சிலருக்கு பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.

சீனாவின் கோஜி பெர்ரி:

கோஜி பெர்ரி என்பது வடமேற்கு சீனாவில் காணப்படும் இரண்டு வகையான புதர் செடிகளின் (லைசியம் சினென்ஸ் மற்றும் லைசியம் பார்பரம் ஆகியவற்றின்) பழமாகும்.

இந்த உலர்ந்த கோஜி பெர்ரிகள் சீன சூப்களில் ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

கோஜி பெர்ரியால் தயார் செய்யப்படும் மூலிகை தேநீர் அங்கு பிரபலமாக உள்ளது.

உலர் திராட்சையை போன்று உள்ள இந்த பழத்தை சீன மக்கள் சிற்றுண்டியாகவும் உண்கின்றனர்.

சீன மருத்துவத்தில், கோஜி பெர்ரிகளில் “கண்களை ஒளிரச் செய்யும்” குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோஜி பெர்ரிகளில் உள்ள ஜியாக்சாந்தின் வடிவமும் அதிக உயிர் கிடைக்கும் வடிவமாகும். இது செரிமான அமைப்பில் உடனடியாக உறிஞ்சப்படுகிறது, எனவே உடல் அதை நன்றாக பயன்படுத்தலாம்.

ஆய்வுகள் கூறுவது :

உலர்ந்த கோஜி பெர்ரிகளை சிறிய அளவில் உட்க்கொள்வதனால் ஆரோக்கியமான நடுத்தர வயதினருக்கு வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (சிதைவு) (AMD – ஏஎம்டி) அல்லது ஏஎம்டியின் வளர்ச்சியைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவும் என்று கூறுகிறது.

வயதானவர்களின் பார்வை இழப்புக்கு ஏஎம்டி முக்கிய காரணமாகும், அமெரிக்காவில் 11 மில்லியனுக்கும் அதிகமானவர்களையும் உலகளவில் 170 மில்லியனையும் பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏஎம்டி ஆனது உங்கள் மையப் பார்வையைப் பாதிக்கிறது. மேலும், முகங்களைப் படிக்கும் அல்லது அடையாளம் காணும் திறனையும் இது பாதிக்கலாம்.

ஆராச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 45 முதல் 65 வயதுடைய 13 ஆரோக்கியமான பங்கேற்பாளர்கள் 28 கிராம் கோஜி பெர்ரிகளை வாரத்திற்கு ஐந்து முறை 90 நாட்களுக்கு உட்கொண்டு அவர்களின் கண்களில் பாதுகாப்பு நிறமிகளின் அடர்த்தியை அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆனால், கண் ஆரோக்கியத்திற்கான வணிக ரீதியான துணையை உட்கொண்ட 14 ஆய்வில் பங்கேற்பாளர்கள் அதிகரிப்பைக் காட்டவில்லை.

கோஜி பெர்ரி, லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவற்றை சாப்பிட்ட குழுவில் அதிகரித்த நிறமிகள், தீங்கு விளைவிக்கும் நீல ஒளியை வடிகட்டி, ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை வழங்குகின்றன.

இவை இரண்டும் வயதானவர்களின் கண்களைப் பாதுகாக்க உதவுகின்றன.

கண்களின் விழித்திரையில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு உள்ளது.

மேலும், சாதாரண ஆரோக்கியமான கண்களில் ஆப்டிகல் நிறமிகளை அதிகரிக்க தினசரி சிறிய அளவிலான கோஜி பெர்ரிகள் உண்டாலே போதும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

இயற்கையான உணவு ஆதாரமான கோஜி பெர்ரி, அதிக அளவிலான ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்கின்றன.

Also Read: Foods To Avoid During Cough & Could: சளி, இருமல் இருந்தால், இந்த உணவுகளை தயவு செய்து சாப்பிடாதீங்க!

மேலும், Goji Berries ஆரோக்கிமயான மாகுலர் நிறமிகளை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வுகளின் முடிவுகளில் கூறப்படுகிறது.