Protein Foods: இந்திய உணவில் தரமான புரதம் இல்லையா?
Protein Foods: இந்திய உணவில் தரமான புரதம் இல்லையா?
இந்திய உணவில் புரதம் அதிக அளவில் இருக்கிறது என்கிறார் ஷீலா கிருஷ்ணசாமி.
மேலும், புரதத்தின் தரம் தான் பிரச்சனை, அதன் அளவு அல்ல! என்று விளக்கம் அளித்துள்ளார்.

What is Protein?
மனிதனின் அத்தியாவசிய தேவை உணவு, உடை மற்றும் இருப்பிடம்.
மனிதன் ஓடி ஓடி உழைப்பதே இந்த வயிற்றுக்காகத்தான் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
ஒரு நாட்டின் உணவு பழக்கமானது அந்த நாட்டின் மண்வளம், பருவநிலை மாற்றம், கலாச்சாரம், தொழில்கள், பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள், வாசனைப்பொருட்கள் ஆகியவற்றை பொறுத்தே அமையும்.
உணவில் புரதம்:
நமது தினசரி உணவில் புரதத்தின் அளவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு புரதத்தின் தரமும் முக்கியம்.
ஆரோக்கியமான உணவின் முக்கியமான ஒன்று புரதம்.
தசை பராமரிப்பு, தோல், ஹார்மோன்கள் மற்றும் அனைத்து உடல் திசுக்களிலும் முக்கிய பங்கு வகிப்பதால் புரதங்கள் பொதுவாக உடலின் கட்டுமானத் தொகுதிகள் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான இந்தியர்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்திய உணவில் காணப்படும் புரத பற்றாக்குறையில் தரம் தான் பிரச்சனை, அளவு அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய உணவுமுறை தானியங்களை மையமாகக் கொண்டது.
இந்த புரதம் நிறைந்த தானியங்கள், உடலுக்குத் தேவைப்படும் புரதத்தின் அளவைப் பூர்த்தி செய்தாலும், புரதத்தின் தரம் என்பது இந்தியர்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
Protein Foods:
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகரும், சூப்பர்ஃபுட்ஸ் அறிவியல் கவுன்சிலின் உறுப்பினருமான ஷீலா கிருஷ்ணசாமி தரமான புரதம் தொடர்பாக விளக்கம் அளிக்கிறார்.
“நல்ல ஆரோக்கியத்திற்கான புரதத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருந்தாலும், தற்போதைய இந்திய உணவுகளில் புரதத்தில் தரம் இல்லை என்பது பலரும் அறியாத உண்மை.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதால் அது அமினோ அமிலங்களின் (புரத சத்தின்) தேவையை பூர்த்தி செய்யாது.
எனவே, தினசரி உணவில் புரதத்தின் அளவை மட்டுமல்லாமல், தரத்தையும் சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியம், என்கிறார் ஷீலா கிருஷ்ணசாமி.
அதாவது, தானியங்களை பருப்புகளுடன் இணைப்பது சைவ உணவில், அத்தியாவசிய அமினோ அமில தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது,
அதே சமயத்தில் அசைவ உணவில், முட்டை மற்றும் இறைச்சிகள் மூலம் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கிடைக்கிறது.
புரதம் பற்றிய தவறான எண்ணங்கள்:
இந்தியர்களிடையே உள்ள புரதத்தை பற்றிய சில தவறான எண்ணங்களை நீக்கி, உங்கள் உணவில் புரதத்தின் தரத்தை உயர்த்துவதற்கான சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

High Protein Foods:
புரதம் மிகவும் முக்கியமானது:
ஆரோக்கியமான, வலுவான உடலை உருவாக்குவதற்கு புரதத்தின் பங்கு அவசியமானது.
புரதம் என்பது எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு மற்றும் தோலின் முக்கிய கட்டுமானத் தொகுதியாகும்.
மேலும் நமது முடி மற்றும் நகங்கள் பெரும்பாலும் புரதத்தைக் கொண்டிருக்கின்றன.
சேதத்தை சரிசெய்தல்:
உடலில் காயம் ஏற்பட்டால், திசுக்களை உருவாக்கவும் சரிசெய்யவும், தசையை பராமரிக்கவும், நமது உடல் புரதத்தைப் பயன்படுத்துகிறது.
ஆக்ஸிஜனை வழங்குதல்:
இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் என்ற ஒரு வகை புரதம் உள்ளது, இந்த புரதம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் ஒரு கலவை ஆகும்.
ஹீமோகுளோபின் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதற்கு புரதம் மிகவும் அவசியம்.
Protein Deficit:
தரமற்ற புரதம்:
புரதம் 20 அமினோ அமிலங்களால் ஆன ஒன்று.
மேலும் இந்த 20ல் 11ஐ உடல் உற்பத்தி செய்ய முடிகிறது.
மீதமுள்ள ஒன்பதும் உணவின் மூலம் வர வேண்டும்.
மீதமுள்ள இந்த 9 அமினோ அமிலங்கள் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஆகும்.
முழுமையான புரதங்கள் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்குகின்றது.
மேலும் பால், முட்டை, இறைச்சி மற்றும் சோயா ஆகியவை முழுமையான புரதம் கொண்ட உணவுகளாகும்.
பெரும்பாலான தாவர உணவுகளில் (சோயாவைத் தவிர) அத்தியாவசிய அமினோ அமிலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, தானியங்களில் லைசின் குறைபாடு உள்ளது. இது ஒருவகை அத்தியாவசிய அமினோ அமிலம் ஆகும்.
பருப்புகளில் மெத்தியோனைன்( கரிம இரசாயன கலவை) இல்லை.
இந்திய நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து உணவு வகைகளிலும் இந்தியர்கள் தானியங்களை அதிகம் உட்கொள்வதாக குறிப்பிடப்படுகிறது.
Also Read: Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது?
RDA என்பது பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள்.
புரதத்திற்கான RDA (Recommended Dietary Allowances) பூர்த்தி செய்யப்பட்டாலும், தானியங்கள் முழுமையடையாத புரதங்களாக இருப்பதால், புரதத்தின் தரம் குறைவாகவே உள்ளது என்கிறார் ஷீலா கிருஷ்ணசாமி.