இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Health Tips: உங்கள் நாக்கு நிறம் உங்கள் health secrets-ஐ சொல்லி விடும் தெரியுமா..?

Health Tips: உங்கள் நாக்கு நிறம் உங்கள் health secrets-ஐ சொல்லி விடும் தெரியுமா..?

ஆலோசனையின் ஒரு பகுதியாக, உங்கள் நாக்கை வெளியே நீட்டும் படி உங்கள் மருத்துவர் ஏன் எப்போதும் கேட்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Health Tips


நாக்கு நமது உடலில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. நாம் பலதரப்பட்ட சுவைகளை அறிய உதவுவதோடு, நாம் பேசுவதற்கும் காரணமாக இருப்பது நமது நாக்கு (Tongue). ஆனால், நமது உடல்நலம் தொடர்பான பல ரகசியங்களையும் இது அறிந்து வைத்துள்ளது என்பது பலருக்கு தெரியாது.

ஆம், நாவின் நிறத்தைப் பொறுத்து, நம் உடல்நலம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். புகைபிடித்தல், சிலவகை உணவுப் பொருட்கள் காரணமாக நாக்கில் மஞ்சள்-வெள்ளை நிற படலம் உறைந்து விடுகிறது. இருப்பினும், சில நேரங்களில் நாக்கு சிவப்பு, கருப்பு நிறமாக மாறுவதும் உண்டு.

உங்கள் உணவைத் தவிர, தூக்கமின்மை, நோய், பாக்டீரியா ஆகியவற்றாலும் நாவின் நிறம் மாறுகிறது. ஆரோக்கியமான நாவின் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு.

இருப்பினும், நாக்கில் ஒரு வெள்ளைப் படலம் இருப்பதும் சாதாரணமாகவே கருதப்படுகின்றது. நாம் உண்ணும் சில உணவுப் பொருட்களின் மாவுப் பகுதி தங்கி விடுவதால் அது ஏற்படுகிறது. சரியாக நாவை சுத்தம் செய்து விட்டால் அது நீங்கி விடும்.

Health Tips:

ஆழமான சிவப்பு நிறம் கொண்ட நாக்கு:

இரத்த சோகை, சிவப்பு காய்ச்சல் காரணமாக நாவின் நிறம் அடர் சிவப்பு நிறமாக மாறக்கூடும்.

இது தவிர, இது வைட்டமின் பி 12 (Vitamin B12) குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

அதே நேரத்தில், நாவின் கீழ் பகுதி அடர் சிவப்பு நிறமாக மாறினால், குடலில் வெப்பம் அதிகரித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கருப்பு நாக்கு:

கருப்பு நாக்கு பெரும்பாலும் மோசமான சுகாதார நடைமுறைகளைக் குறிக்கிறது, ஏனெனில் இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் வழக்கமான பயன்பாட்டில் கீமோதெரபிக்கு உட்படும் நோயாளிகள் கருப்பு நாக்கை உருவாக்கலாம்.

நாக்கில் உறைந்த மஞ்சள் படலம்:

நாக்கில் அடர்த்தியான மஞ்சள் படலம் இருந்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்கிறீர்கள் என பொருள்.

இது தவிர, கல்லீரல், அல்லது வாயில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருப்பதால், நாக்கில் மஞ்சள் படலம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாய் துர்நாற்றம், சோர்வு, காய்ச்சல் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

Also Read: பெர்ரி பழங்கள் உடலுக்கு அளிக்கின்ற நன்மைகள்..!

அடர் பழுப்பு நிறம்:

அதிகப்படியான காஃபி, புகைபிடித்தல் அல்லது ஆல்கஹால் காரணமாக நாக்கு அடர் பழுப்பு நிறமாக மாறும். இருப்பினும், அதைப் புறக்கணிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

நாக்கில் கரும்புள்ளிகள்:

நாக்கில் உருவாகும் கரும்புள்ளிகள் உடலில் இரத்தம் இல்லாததையும், நீரிழிவு நோயையும் (Diabetes) குறிக்கின்றன. இது தவிர, வாயில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் (Bacteria) இருப்பதாலும், நாக்கில் கரும்புள்ளிகள் தோன்றும்.