Ayurvedic Medicine: பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு கசாயத்தின் நன்மைகள்..!

Ayurvedic Medicine: பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு கசாயத்தின் நன்மைகள்..!

நிலவேம்பு என்பது இந்தியா, இலங்கை மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கிராமப் பகுதிகள் மற்றும் இயற்கை வளம் நிறைந்த காடுகளில் விளைகின்ற ஒரு அற்புத மூலிகை செடியாகும்.

Ayurvedic Medicine

Ayurvedic Medicine:

பல்லாண்டு காலமாகவே நம் முன்னோர்கள் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பினை பயன்படுத்தி வந்தனர்.

தற்போதய காலங்களில் பரவி வந்த டெங்குகாய்ச்சலுக்கு எதிராக நிலவேம்பு கஷாயம் மருந்தாக பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பிறகே இந்த மூலிகை பற்றி பலரும் அறிந்து கொண்டனர்.

இன்றைய காலங்களில் பல இடங்களில் பல்வேறு தரப்பினராலும் இலவசமாகவே மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டு வருகின்றது.

நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் மிக சரியான விகிதத்தில் தயாரிக்கப்படும் கலவையே நிலவேம்புக் குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயமாகும்.

அத்தகைய நிலவேம்பு குடிநீர் பருகுவதால் மருத்துவ ரீதியிலான நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

டெங்கு காய்ச்சல்:

டெங்கு காய்ச்சல் என்பது, டெங்கு வைரஸ் சுமந்து திரியும் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது கடுமையான காய்ச்சல், உடல் வலி, ரத்தம் உரையும் நிலை குறைதல் ஆகியவற்றை உண்டாக்கி மரணத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய நோய் ஆகும்.

இந்த நோய்க்கு ஆங்கில மருந்துகளை காட்டிலும் அதிக வீரியத்துடன் செயல்படும் மருந்தாக நில வேம்பு இருக்கிறது.

நிலவேம்பில் இருக்கும் வேதிப்பொருள் டெங்கு வைரஸ் கிருமிகளை அழிப்பதில் மிக சிறப்பாக செயலாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நிலவேம்பு இலைகளை பொடி செய்து, நிலவேம்பு கசாயம் காய்ச்சி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வந்ததில் டெங்கு வைரஸ் அழிந்து, டெங்கு காய்ச்சல் நீங்கியது.

மேலும் உடலில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்கள் நீங்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி மீண்டும் பழைய ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வருவதால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் .

மேலும் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம்.

பசி உணர்வு தூண்ட :

நீண்ட நாட்களாக ஜுரம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்களுக்கு பசி உணர்வு வெகுவாக குறைந்து விடுகிறது.

இதற்குக் காரணம், கல்லீரலில் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய உதவும் பித்த நீர் சுரப்பு குறைந்து விடுவதே ஆகும்.

இப்படிப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை சரியான சதவிகித அளவில், முறையான கால இடைவெளிகளில் கொடுத்து வந்தால் வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பு அதிகரிக்கும் .

மேலும் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக உணவு சாப்பிடக் கூடிய ஆர்வம் ஏற்படும்.

குடற்புழுக்கள் நீங்க:

நாம் சாப்பிடும் சாக்லேட் போன்ற உணவுகளில் கண்ணுக்குத் தெரியாத சிறிய புழுக்கள் சென்று நமது குடலில் தங்கி விடுகின்றன.

இந்த புழுக்கள் நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி கொள்வதோடு, நமது உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தீங்கான புழுக்களை அழித்து, வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேற்றுவதற்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு கசாயம் இருக்கிறது.

தலைவலி குணமாக :

மனிதர்களின் உடலில் தலை முக்கிய உறுப்பாகும். ரத்த அழுத்த பிரச்சனை காரணமாகவும் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாகவும் பலருக்கு தலைவலி ஏற்படுகின்றன.

Also Read: Skin Cancer: திடீரென உருவாகும் மச்சம் அழகா..! ஆபத்தா..!

நிலவேம்பு கஷாயத்தை இளம்சூடான பதத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பருகி வருவதால் எப்படிப்பட்ட கடுமையான தலைவலியும் நீங்கும்.

ஜலதோஷத்தால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்களுக்கு அந்த நீர் இறங்கி தலைபாரம் மற்றும் தலைவலி ஆகியவை நீங்கும்.