Ginger Benefits: உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சி..!
Ginger Benefits: உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சி..!
அனைத்து இந்திய சமையலறைகளிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொருள் என்றால் அது இஞ்சிதான். இஞ்சி பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல, அதிலிருக்கும் மருத்துவ குணங்களும்தான்.

இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான பிரச்சினை முதல் புற்றுநோய் வரை தடுக்கக் கூடிய ஆற்றல் உடையது.
ஆரம்பத்தில் தினமும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வது கடினமாக இருக்கலாம்
ஆனால் அதன் சுவை பழகிவிட்ட பிறகு அந்த சுவை நமக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.
இப்படி ஏராளமான நன்மைகளை அளிக்கும் இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் அதிசயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
Ginger Benefits:
சில நேரங்களில் சாப்பிட்ட உடன் எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் பிரச்சினை உண்டாகலாம்.
இந்த நெஞ்செரிச்சல் பிரச்சினை வேதனைக்கு உரியது. இதை சரி செய்ய இஞ்சி உதவுகிறது. கொஞ்சமாக இஞ்சியை தேநீரில் போட்டு குடித்து வர நெஞ்செரிச்சல் நீங்கும்.

அழற்சியால் தான் பலவிதமான நோய்கள் வருகின்றன. கீல்வாதம் போன்ற நோய்களை சரி செய்ய இஞ்சியை எடுத்துக் கொண்டு வரலாம். ஏனெனில் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் அழற்சியால் ஏற்படும் நோய்களை விரட்டுகிறது.
இஞ்சி புற்றுநோய் செல்களின் அபாயத்தை போக்கும் தன்மை கொண்டது. இஞ்சி கீமோதெரபி மருந்துகளை விட கருப்பை புற்றுநோய் செல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொன்றுவிடுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
பெருங்குடல் மற்றும் குடல் அழற்சியைத் தடுக்க இஞ்சி உதவுகிறது.
இந்த அழற்சி தான் பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை உண்டாக்குகிறது.
எனவே இஞ்சியை சாப்பிட்டு வரும் போது பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க முடியும்.

அஜீரண பிரச்சினைகளுக்கு இயற்கையாக நிவாரணமளிக்கும் பொருட்களில் ஒன்று இஞ்சியாகும். கூடுதலாக, குமட்டலுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்,
தலைவலிக்கு நீங்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே இயற்கையான வலி நிவாரணியாக நீங்கள் இஞ்சியை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே ஒவ்வொரு நாளும் இஞ்சியை சேர்த்து வருவது உங்க தலைவலியை குறைக்கும்.

இஞ்சி உங்க மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. எனவே உணவில் இஞ்சியை சேர்க்கும் போது உங்க மெட்டா பாலிசி செயல்கள் அதிகரித்து உடல் எடையை குறைக்க முடியும்.
Also Read: இளநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!
இஞ்சியை தினசரி உணவில் சேர்த்து வருவது உங்க உடல் எடையை பராமரிக்க உதவி செய்கிறது.
தினமும் இஞ்சி உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக பல தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி டீ, இஞ்சி துவையல், உணவுடன் சேர்த்து, சாலட் களில் இஞ்சியை சேர்த்து பயன்படுத்தி வரலாம். அளவோடு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை நீங்கள் பெற முடியும்.