Today Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Eye Care: அடர்த்தியான கண் இமைகள் வளர எளிய டிப்ஸ்.!

Eye Care: அடர்த்தியான கண் இமைகள் வளர எளிய டிப்ஸ்.!

உங்கள் கண் இமைகள் உதிர்ந்து போகின்றனவா?

இமைகள் அடர்த்தி குறைவாக உள்ளனவா? கவலை வேண்டாம்.

Eye Care

Eyelash Extensions :

வீட்டில் உள்ள சாதாரன பொருட்களை கொண்டு கண்களில் உள்ள இமைகளை அடர்த்தியாக மாற்ற சில எளிய டிப்ஸ்!

கண் இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யவேண்டியவை:-

Vitamin E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, தினமும் இரவில் தேய்க்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி Olive Oil மற்றும் ஈமு எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து, அதை தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

Eye Care :

சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும்.

ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து வர வேண்டும்.

மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.

விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை தினமும் இரவில் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.

Also Read: Can we eat paneer daily? பன்னீரை எப்படி நாம் சரியான முறையில் சாப்பிடலாம்..?

வாசலினை(vaseline) மஸ்காரா பிரஷின் மூலம் கண் இமைகளின் மேல் பிரஷ் செய்ய வேண்டும். இது கண் இமைகளை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரச் செய்யும்.

தேங்காய்ப் பாலை பஞ்சில் ஊரவைத்து கண்களின் மேல் வைக்கவும். இது கண் இமைகளுக்கு தேவையான மிருதுத்தன்மையையும் அடர்த்தியையும் கொடுக்கும்.