News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்மூலிகைகள்

Cardamom powder : தினம் 2 ஏலக்காய் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?

Cardamom powder : தினம் 2 ஏலக்காய் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?

ஏலக்காய் கலந்த பால் குடிப்பதால் செரிமானம் மேம்படும். இது பல வகையான செரிமான நோய்களையும் நீக்குகிறது.

Cardamom Health Benefits

Cardamom powder:

ஃபைபர் ஊட்டச்சத்து நமது செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, செரிமான அமைப்பை மேம்படுத்த ஏலக்காய் பால் குடிப்பது நல்லது.

ஏலக்காய் வாய் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கின்றது.

எனவே பாலில் ஏலக்காயை சேர்த்து காய்ச்சி குடிப்பதால் வாய் புண்கள் தீரும்.

உயர் இரத்த அழுத்தம் நோயாளிகள் பாலில் ஏலக்காய் கலந்து குடிப்பது நல்லது.

பால் மற்றும் ஏலக்காய் இரண்டிலும் ஏராளமான மெக்னீசியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றது.

​ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

100 கிராம் ஏலக்காயில்…

புரோட்டீன் – 11 கிராம்
கொழுப்பு – 0 மில்லிகிராம்
கார்போஹைட்ரேட் – 68 கிராம்
மொத்த கொழுப்பு – 7 கிராம்
கலோரி – 311 கிலோ கலோரி
ஏலக்காய், இஞ்சி குடும்பத்தை சேர்ந்த தாவரம் ஆகும். இதன் விதைகள் சமையலுக்கும், மருத்துவ நன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அளவு, வகைகளை பொறுத்து இது வகைப்படுத்தப்படுகின்றன.

​ஏலக்காயின் மருத்துவ பயன்கள்:

மருத்துவ பயன்களுக்காக, ஏலக்காய், இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

​மனஅழுத்தம் குறைய:

ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், உங்களை நிதானப்படுத்துகிறது. இது கார்டிசால் ஹார்மோனை சுரக்கச் செய்து, மன அழுத்தத்தை குறைத்து, சுவாசித்தலை எளிதாக்குகிறது. ஏலக்காயின் வாசனை, நமது மனதை சாந்தமடைய செய்ய உதவுகிறது.

​வீக்கங்களை குறைக்கிறது:

சைனஸ் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாக ஏலக்காய் திகழ்கிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க உதவுகிறது.

​சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு:

ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சினை கொண்டவர்கள், அதற்குரிய மருந்துகளுடன் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை அதிகரித்து எளிதாக சுவாசிக்க உதவுகிறது.

சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு:

சிறந்த சருமம் : ஏலக்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு, சருமம் பொலிவு கொண்டதாக மாறும்

Also Read: Banana Side Effects: வாழைப்பழங்களை இப்படி சாப்பிடவே கூடாதாம்..!

மிருதுவான உதடுகள் : ஏலக்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு இடம் இருக்காது.