Tamil NewsThatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits of Mint: மணம் தரும் புதினாவில் இவ்வளவு மருத்துவக்குணங்களா!

Benefits of Mint: மணம் தரும் புதினாவில் இவ்வளவு மருத்துவக்குணங்களா!

புதினா ஒரு சிறந்த மருத்துவ மூலிகை ஆகும். இதனை பெரும்பாலும் சமையலில் மணத்திற்காக மட்டுமே சேர்த்து வருகின்றோம்.

Benefits of Mint

What are the Uses of Mint?

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய அடங்கியுள்ளன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த இது மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தொண்டையில் புண் உள்ளவர்கள், புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் தேய்த்து விட்டால் போதும், நாளடைவில் தொண்டைப் புண் ஆறிவிடும்.

வயிற்று பெருமல் நீங்குவதற்கு, புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்களை அழிந்து வாய்வுத் தொல்லை நீங்கும்.

சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.

மேலும் சமையலுக்கு ஓர் சிறந்த மணமூட்டியாக புதினா உள்ளது. காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை உணவில் கமகமக்கும்.

பழச்சாறு போன்றவை செய்யும் போது, அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி குடிக்கலாம், அது புத்துணர்ச்சியினை ஊட்டும்.

Benefits of Mint:

நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பெருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் கட்டி எரிச்சல் இருக்கும் பாதத்தில் ஒத்தடம் கொடுத்தால் எரிச்சல் குறையும்.

திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுபவர்கள், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரினை பருகினால் போதும், சரியாகிவிடும்.

புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து, எண்ணெயில் வதக்கி, சூடு தணிந்த பின்பு நன்கு அரைத்து, துவையல் பதத்தில் செய்து வைக்கலாம்.

அடிக்கடி வயிற்றவலி ஏற்படுபவர்கள், இந்த முறையில் துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி நிரந்தர குணமடையும்.

புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி போன்று கூட தயாரிக்கலாம். மூச்சுவிடச் சிரமப்படுபவர், ஆஸ்மா நோயாளி, எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு எல்லாம் சிறந்த மருந்தாக இப்பச்சடி இருக்கும்.

Mint Leaves Uses:

மேலும், ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு ounces of carrot juice ஆகியவற்றை கலந்து, தினமும் மூன்று வேளை tonic போன்றும் குடிக்கலாம்.

பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். இதனால் பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம்.

புதினாத்தேநீர் குடிப்பவர்கள் புதினா பொடியுடன் பாலும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நல்ல பலன் தரும்.

மேலும், புதினா கீரையில் நமக்கு தேவையான நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானக்கும் வகையில் உள்ளது. இரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும்.

பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீரவும் புதினாக்கீரை உதவுகின்றது.

புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

புதினாவின் சாறினை எடுத்து முகப்பருக்களிலும், வறண்ட சருமத்திலும் தடவினால் மிகுந்த பலன் கிடைக்கும்.

Also Read: Skin Disease Treatment: கோவைக்கீரையின் மருத்துவப் பயன்கள்:

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிக்கும் போது முடியை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பளபளப்புடன் இருக்கும்.

குறிப்பு:

புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *