News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Foods for Liver: கல்லீரலை பாதிப்படையாமல் காக்கும் உணவுகள் என்னென்ன  தெரியுமா?

Foods for Liver: கல்லீரலை பாதிப்படையாமல் காக்கும் உணவுகள் என்னென்ன  தெரியுமா?

நம் மனித உடலின் உறுப்புகள் அனைத்துமே முக்கியமானவை.

அதில் கல்லீரலானது செரிமானத்துக்கு தேவையான பித்தநீரைச் சுரக்கும் பணியை செய்கிறது.

Foods Good for Liver

Foods for Liver:

இப் பணியினை செய்யும் கல்லீரல் பாதிக்கப்படும் போது மஞ்சள்காமாலை, அஜீரணக்கோளாறு, சோர்வுருதல் தலைச்சுற்றல், கருவளையம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

அடுத்து கல்லீரல் அதனுடைய பணிகள் பற்றி தெரிந்துகொண்டு கல்லீரலுக்கு பாதுகாப்பு தரும் உணவுகள் பற்றி அறியலாம்.

கல்லிரலானது நாம் சாப்பிடும் உணவை செரிமானமாக்கி உணவில் இருக்கும் சக்தியை சேகரித்து  வைக்கிறது.

ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. நாம் ஓய்வாக இருக்கும் நேரத்திலும் கல்லீரல் தன்னுடைய சுத்திகரிப்பு பணியைச் செய்து உடலில் இருக்கும் கழிவுகளை பிரித்து சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற்றுகிறது.

கல்லீரலினை காப்பாற்றும் உணவுகள்:

உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளான இதயம் சிறுநீரகம் கண்கள் போன்ற உறுப்புகளை மாற்றிவிடலாம்.

பித்தப்பை கர்ப்பப்பை போன்ற உறுப்புகளை நீக்கிய பிறகும் வாழலாம்.

ஆனால் கல்லீரல் பாதிப்படைந்தால் உரிய சிகிச்சையும் உணவுக் கட்டுப்பாடும்  கடைப்பிடிக்கும்  போது கல்லீரல் சுயமாக மீண்டுவரும்.

மேலும் கல்லீரல் பகுதி முழுவதும் பாதிப்படைந்து செயலிழக்கும் போது நம் உடலின் பல பாகங்கள் செயல்புரிவதை நிறுத்திவிடும்.

இத்தகைய கல்லீரலினை காப்பாற்ற எவ்வகை உணவை எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம்.

குர்குமின்:

மஞ்சள் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருள் இல்லை. ஆயுர்வேதம் சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் கிருமி நாசினி என்று அழைக்கப்படுவதற்கு காரணமும் இதுதான்.

மஞ்சளில் இருக்கும் குர்குமின்(Curcumin) கல்லீரலில் கொழுப்புப் படிவதை தடுக்கிறது.

உடலை சுத்திகரித்து நச்சுக்களை வெளியேற்ற கல்லீரல் உதவுகிறது என்றால், கல்லீரலை சுத்திகரித்து அதைப் பாதுகாக்க மஞ்சள் உதவுகிறது என்று சொல்லலாம்.

மேலும் கல்லீரல் நொதிகளுடன் சேர்ந்து புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens) காரணிகளை அழித்துவிடுகிறது.

வைட்டமின் சி:

வைட்டமின் சி இல்  உள்ள உணவுகள் கல்லீரலைச் சுத்தப்படுத்துவதோடு அதில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

கல்லீரலைப்  பலப்படுத்தி நோய் எதிர்ப்புக்சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் உண்ணும் உணவின் செரிமானத்தை எளிதாக்குகிறது.

வைட்டமின் சி  நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்றவற்றை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லிரல் தன் பணியைச்  சிறப்பாக செயல்படுத்தும்.

பழங்கள்:

நாம் சாப்பிடும் பழங்களில் பெரும்பாலானாவை கல்லீரலுக்கு நன்மை தருபவையாக உள்ளன.

சிவப்பு ஆப்பிள், க்ரீன் ஆப்பிள் இரண்டுமே உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற துணைபுரிகின்றன.

இவை தவிர மாதுளை, பப்பாளி, பெர்ரி பழங்களையும் உண்ணலாம்.

அன்றாடம் ஒரு பழம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காய்கறிகள்:

பச்சைகீரைகள், காய்கறிகளில் பலவிதமான சத்துகள் இருக்கின்றன.

பச்சைக் கீரைகளை தொடர்ந்து எடுக்கும்போது கீரையில் இருக்கும் குளோரோஃபில் கல்லீரலின் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

குறிப்பாக காலிஃப்ளவர் மற்றும் ப்ரக்கோலியைத் தவிர்க்காமல்

எடுத்துகொள்ளுங்கள்.

கல்லீரல் தன்னைத்தானே சுத்தம் செய்துக்கொள்ள இவை உதவும்.

நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கி உடல் நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

இதனால் கல்லீரலின் பணி எளிதாகிறது.

கேரட், பீட்ரூட் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி நச்சுகளை வெளியேற்றும்.

முட்டைகோஸ் கல்லீரல் செல்களை உயிர் பெற செய்ய உதவுகிறது.

Also Read: Food For Weight Loss: உடல்கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் உணவுகள்..!

உணவில் இருக்கும் சத்துகள் சீராக உடலுக்கு சேரவும் அதன் நச்சுகள் நீங்கவும் கல்லீரலின் செயல்பாடு மிக முக்கியம்.

அந்த கல்லீரலின் ஆயுள் குறையாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சேர்த்து பலன் அடையுங்கள்.