News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits of Lemon for Hair : பளபள கூந்தலுக்கு எலுமிச்சை எண்ணெய்! தயாரிப்பது எப்படி?

Benefits of Lemon for Hair : பளபள கூந்தலுக்கு எலுமிச்சை எண்ணெய்! தயாரிப்பது எப்படி?

எலுமிச்சை ஆனது உணவை தாண்டி பல நன்மைகளை கொண்டுள்ளது. இது சருமத்துக்கும் கூந்தலுக்கும் பல நன்மைகளை தருகிறது. நம் முடி பராமரிப்புக்கு உதவும் எலுமிச்சையினை சாறாக பயன்படுத்துவது கடினம்.

Benefits of Lemon for Hair

Benefits of Lemon for Hair :

எனவே, எலுமிச்சையை எண்ணெயாக தயாரித்து கூந்தலுக்கு பயன் படுத்தலாம்.

இது இயற்கை ப்ளீச் என்பதால் பெரும்பாலும் சருமம் மற்றும் கூந்தல் சுத்தத்துக்கு பயன்படும் தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

“இயற்கையாகவே முடியை பளபளப்பாக்க விரும்புவர்களுக்கு ஏற்ற ஓன்று எலுமிச்சை எண்ணெய்.”

எலுமிச்சை எண்ணெய் கடைகளில் எளிதாக கிடைக்கிறது, ஆனால் இதை வீட்டிலேயே தயாரிக்க விரும்பினாலும் எளிதாக தயாரிக்கவும் முடியும்.

மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த எண்ணெயை தயாரித்து பயன்படுத்தலாம்.

அடுத்து எண்ணெய் தயாரிக்கும் முறையை காணலாம்:

செய்ய தேவையான பொருள்கள்:

10 -எலுமிச்சை பழம் 

தரமான எலுமிச்சையை பயன்படுத்துவது நல்லது. எலுமிச்சையை நன்றாக கழுவவும். அதன் மேல் தோலில் இரசானயங்கள் இருக்க வாய்ப்புண்டு என்பதால் சரியாக கழுவி கொள்ளவும்.

எலுமிச்சையை  சரி பாதியாக வெட்டி எடுக்கவும். எலுமிச்சை சாறை  தனியாக பிரித்தெடுக்கவும்.

அடுத்து எலுமிச்சை தோலை மறுபுறத்தில் பிரிக்கவும் எலுமிச்சை தோலின் உள்ளிருக்கும் வெள்ளை நிறப்பகுதியை சுத்தம் செய்துகொள்ளவும்.அல்லது எலுமிச்சையின் தோலை மட்டும் தனியாக சீவி எடுக்கவும்.

ஏனெனில் எண்ணெய் தயாரிக்க தோல் பகுதி மட்டும்தான் தேவை.

தோலின் உள்ளிருக்கும் வெள்ளைப்பகுதியை எடுக்க முடியாவிட்டால் விட்டுவிடுங்கள்,

எவ்வாறு எண்ணெய் தயாரிக்கலாம்?

அடுப்பை மிதமான தீயில் வைத்து டபுள் பாயில் முறையில் காய்ச்ச வேண்டும்.

முதலில் ஓர் விரிந்த  பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அந்த பாத்திரத்தின்  உள்ளே வைக்கும் அளவு மற்றொரு பாத்திரம் எடுக்கவும்.

அதில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் உடன் எலுமிச்சை தோல் சிறு துண்டுகளாக நறுக்கியதை சேர்த்து இரண்டையும் பாத்திரத்தில் விட்டு கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

Also read: Flowers Used as Medicine: உடல் நோயை விரட்டும் பூக்கள்..! அறிந்து உண்போம், பயன்பெறுவோம்..!

பாத்திரத்தில் கொதிக்கும் நீர், எலுமிச்சை  தேங்காய் எண்ணெய் இருக்கும் பாத்திரத்தில் கலக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.

அடுப்பு மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.இப்போது எலுமிச்சை தோல் எண்ணெய்யோடு கலந்து வரும்.