News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்

Food For Anemia: இரத்த சோகையை குணப்படுத்துமா இந்த சக்கரவர்த்தி கீரை..?

Food For Anemia: இரத்த சோகையை குணப்படுத்துமா இந்த சக்கரவர்த்தி கீரை..?

சக்கரவர்த்தி கீரையின் பயன்கள்:

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என்ற பெயரினை பெற்றுள்ளது. இந்த கீரையின் இலை அமைப்பு , வாத்தின் கால் போல இருக்கும். இது வயல் வரப்புகளில் தானாக வளரக்கூடியது.

சக்கரவர்த்தி கீரைக்கு, பருப்பு கீரை, கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி போன்ற வேறு பெயர்களும் உண்டு.

Food For Anemia

இதன் ஆங்கிலப் பெயா் பிக் வீட்(Pig Weed)ஆகும். இதற்கு, கூஸ் புட் (Goose Foot)என்னும் பெயரும் உள்ளது.

இந்த சக்கரவர்த்தி கீரையின் தாவரவியல் பெயா் செனபோடியம் ஆல்பம் (Chenopodium Album) ஆகும்.

இதன் விதை அரைக்கீரையின் விதையைப்போன்றே கறுப்பு நிறமாகவும், சிறியதாகவும் காணப்படும்

சக்கரவர்த்தி கீரை ஏறக்குறைய 75 செ.மீ உயரம் வரை வளரும் தன்மைக் கொண்டது.

இச்செடியின் தண்டு,காம்பு போன்ற பகுதிகள் சிவப்பாக இருக்கும். இலையின் மறுபக்கம் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது.

கூடவே, இக்கீரை சிறுநீரக கற்களில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும் தன்மைக் கொண்டது.

சக்கரவர்த்தி கீரையினை உண்பதன் மூலம் எலும்புகள் பலம் அடைந்து, திடமாக காணப்படும்.

நார்சத்து மிகுந்த இக்கீரை சிறந்த ஓர் சரிவிகித உணவாக உள்ளது.

இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை அளிக்கும் தன்மை வாய்ந்தது.

சக்கரவர்த்தி கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.

சக்கரவர்த்தி கீரை புற்றுநோய்க்கு சிறந்த ஓர் மருந்தாக செயல்படுகிறது. மேலும், இந்த கீரை உண்பதால் எலும்புகள் பலமடைகிறது.

சீறுநீரை எளிதில் வெளியேற்றும் தன்மைகொண்டது.இது வயிறுப் புண்ணை சரிசெய்யும் திறன் வாய்ந்தது.இது ஜீரண சக்தியை அளிக்கக் கூடியது.

இக்கீரை உடலுக்கு குளிர்ச்சி உண்டாகக்கூடியது வயிற்றுப் புண்களை சரி செய்யும் தன்மை கொண்டது.

Food For Anemia:

இதன் இலைகளை உண்டால் ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது.

சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

ரத்த சோகை நோய் உள்ளவர்கள் இந்த வடிகட்டியக் கீரையினை சாறினை குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும், மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு கோளாறு நோய்களும் மறைந்து விடும்.

Get Clear Skin:

சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக தோள்களின் மேல் போசினால், வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் போன்றவை மறைந்து அழகான பளபளப்பு மிகுந்த சருமத்தினை கொடுக்கும்.

மேலும் ரத்தம், தாது ஆகியவற்றை பெருக்கி உடலுக்கு தேவையான சக்தி, அழகு, வலிமையை அளிக்க கூடிய ஒரு அதிசய கீரை.

Also Read:Anti Inflammatory Diet: வியப்பூட்டும் அகத்திக் கீரையின் பயன்கள்..!

How To Get Rid Of Knee Pain Fast?

சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்தும் தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு. அதே இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி மெதுவாக குறைந்து விடும்.

வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் வலி மறையும்.

சக்கரவர்த்தி கீரையினை உண்பதன் மூலம் எலும்புகள் பலம் அடைந்து, திடமாக காணப்படும்.

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில் வைட்டமின் A, C போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

இத்தனை மருத்துவ குணங்களை கொண்ட சக்கரவர்த்தி கீரையை நம் உணவில் சேர்த்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *