News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்

Best Way To Lose Weight: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

Best Way To Lose Weight: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

மூக்கரட்டி சாரை அல்லது மூக்கிரட்டை என்ற இந்த தாவரம் ஒரு பூக்கும் மூலிகை தாவரம் ஆகும். இந்த வகைச்செடிகள் இந்தியா மட்டுமின்றி பசுபிக் பகுதி, தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தியாவில் இதன் இலைகளை மூலிகைகளாகப் பயன்படுத்துகின்றார்கள். மழை இன்றி வறண்டு இருக்கும் போதும், மூக்கிரட்டை முளைத்திருப்பதைக் காணலாம்.

Best Way To Lose Weight

இந்த வகை செடி வயல்கள் அல்லது காடுகளில் மட்டுமல்லாமல் சாலை ஓரத்தில் கூடப் படர்ந்து காணப்படும்.

இந்த மூக்கிரட்டை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்தத் தாவரம் தரையோடு படர்ந்து வளரக்கூடியது ஆகும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.

மூக்கிரட்டை இலைகளின் மேற்புறம் அடர்ந்த பச்சை நிறமாகவும், கீழ்புறம் வெள்ளையாகவும் காணப்படும். வேர்கள் சற்றுத் தடிமனாகப் பூமிக்குள் மறைந்திருக்கும்

இதன் இலைகளில் பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.

மூக்கிரட்டையினையும், சாரனைக்கீரையையும் ஒன்று என்று கூறுவர், ஆனால், இவை இரண்டும் வேறு தான், மூக்கிரட்டையின் வடமொழி பெயர் புனர்னவா என்று குறிப்பிடுகின்றனர்.

ஊட்டச்சத்துக்கள்:

மூக்கிரட்டை கீரையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் அளவு கீரையில் மிகவும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து மட்டுமே இருக்கிறது.

அதேசமயம் 162 மி.கி அளவு சோடியம், 2.26 புரதம், 44.8 மி.கி அளவு வைட்டமின் C, 142 மி.கி அளவு கால்சியமும் 0.012 மி.கி இரும்புச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.

மூக்கிரட்டைக் கீரையின் மருத்துவப் பயன்கள்:

சிறுநீர்ப்பாதை தொற்று:

சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிக எளிதில் வரக்கூடிய நோய் ஆகும்.

இதனால் பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பு, எரிச்சல், நுண் தொற்றுக்கள், பாக்டீரியாக்கள் உள்ளே செல்லுதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனையும் இந்த கீரை குணப்படுத்துகிறது.

வயிற்றுப் பிரச்சினைகள் அகல :

வயிற்றுப் பிரச்சனைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.

Best Way To Lose Weight:

உடல்பருமன் குறைய :

எடை குறைப்பதற்கு நாம் கடைகளில் வாங்கி உண்ணும் ஆயுர்வேத மருந்துகளில் இந்த மூக்கிரட்டை இலை நிச்சயம் உட்பொருளாக இருப்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க இது உதவுகிறது.

Foods For Eye Health:

கண் கோளாறுகள் நீங்க:

பொதுவாகவே கீரைகள் என்றாலே கண்ணிற்கு நல்லது என்று கூறுவர், அதிலும் இந்த மூக்கிரட்டை கீரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

குறிப்பாக, இந்த செடியின் வேர்ப்பகுதியை இடித்து, அந்த சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால், மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

Also Read: Food For Anemia: இரத்த சோகையை குணப்படுத்துமா இந்த சக்கரவர்த்தி கீரை..?

How To Cure Liver Disease?

கல்லீரலை பாதுகாக்க:

நம்முடைய உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகமிக முக்கியமான உறுப்பு. மன அழுத்தம், நெஞ்சு வலி போன்ற சமயங்களில் கல்லீரலின் பணி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்த சமயங்களில் இந்த மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாக செயல்பட வைக்கிறது.

பக்க விளைவுகள்:

மூக்கிரட்டையினை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத் துடிப்பில் சிறிது மாற்றம் ஏற்படலாம்.

எத்தனால் அழற்சி இருக்கிறவர்கள் இந்த கீரையை பயன்படுத்த வேண்டாம்.

அதே போல் கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போன்றவர்களுக்கு இந்த கீரை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *