News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்

Anti Inflammatory Diet: வியப்பூட்டும் அகத்திக் கீரையின் பயன்கள்..!

Anti Inflammatory Diet: வியப்பூட்டும் அகத்திக் கீரையின் பயன்கள்..!

அகத்திக்கீரையின் பயன்கள்:

அகத்தி இது ஒரு சிறுமரம் தாவரவியலில் செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்பதாகும்.

இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை.

Anti Inflammatory Diet

தோற்றம்:

அகத்தி மரம் மற்ற மரங்களை போன்று அதிக கிளைகளுடன் வளருவதில்லை. இது கூட்டு இலைகளை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.

அடங்கியுள்ள சத்துக்கள்:

சித்த மருத்துவத்தில் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் நிறைந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றன.

இதில், 8.4% புரதமும் 1.4 % கொழுப்பும், 3.1 % தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் A போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

மேலும் சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவு காணப்படுவதால், இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது.

அகத்திக் கீரையில் இலை, பூ, காய், பட்டை என அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.

அகத்திக்கீரை கசப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

அதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க உணவாக அதனை சமைக்கும் போது துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.

Benefits Of Agathi Keerai:

மருத்துவப் பயன்கள்:

அகத்திக் கீரை காய்ச்சலினால் ஏற்படும் உடல் சூட்டினை குறைத்து சமப்படுத்தும்.

தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும்

ரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்படும் தலைவலியை அகத்திக் கீரை எளிதில் மறைய செய்கிறது.

ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு அகத்திக் கீரை நல்ல தீர்வு தரும்.

அகத்திக் கீரையின் வேர் மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

அகத்திக் கீரை நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அந்த கிருமி தொற்றினை வேறு உடலில் பரப்பினால், அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

பித்த நோய் உள்ளவர்கள் அகத்தி கீரை சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு எளிதில் பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

அகத்திக் கீரையின் இலைகளில் இருந்து சாறு பிரித்தெடுத்து, அதன் சாற்றில் ஒரு ஸ்பூன் சாறு எடுத்து கூடவே தேனும் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

Anti Inflammatory Diet:

உடலின் தோல்களில் கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு போன்ற பிரச்சனை உள்ளவர்கள், அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, அந்த பகுதிகளில் பற்றுப்போட்டால் அனைத்து நோய்களும் முழுமையாக குணமடையும்.

மேலும், இந்த அகத்திக்கீரையினை சாப்பிடுவதன் மூலம் குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்களும் அகன்று போகும்.

Also Read:Home Treatment For Cough: எவ்வளவு பயங்கரமான சளியையும் குணப்படுத்தும் நல்வேளை கீரை..!

How To Cure Low Bp At Home?

அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், சிறுநீரினை எளிதில் வெளியே செல்ல வைக்கவும் உதவும் வகையில் இருக்கும்.

அகத்திக் கீரை வைட்டமின் C அதிகம் இருப்பதால், இது ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது, கூடவே ரத்த குழாய்கள் தடிமன் ஆவதையும் தடுத்து நிறுத்துகிறது.

ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக் கீரையை உண்பதால் குணமாகும்.

குறிப்பு:

அகத்திக் கீரையை அதிகமாக எடுத்து கொண்டால் நம் உடலின் இரத்தம் கெட்டு போக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தக கீரையை மற்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது சாப்பிடக் கூடாது. ஏனெனில் பிற மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும்.

வாயு கோளாறுகள் உள்ளவர்கள் அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *