Food For Women Health: கர்ப்பப்பை பிரச்சனைகளை தீர்க்கும் கல்யாண முருங்கை!
Food For Women Health: கர்ப்பப்பை பிரச்சனைகளை தீர்க்கும் கல்யாண முருங்கை..!
கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்டது. இதனை முருங்கையின் பெண் பால் என்று கூட கூறலாம்.
இது கிராமப்புறங்களில் “முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு” போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் ஏராளமான மருத்துவக் குணங்கள் கொண்டது.
கல்யாண முருங்கையானது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது.
அகன்ற, பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் கொண்டது.
கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது பழமொழி.
Menstrual Pain Relief:
கல்யாண முருங்கையின் இலைகளை மாதந்தோறும் சமைத்துக் சாப்பிட்டால், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வராது.
மேலும், மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து காக்கக்கூடிய சிறப்பு இந்தக் கீரைக்கு உண்டு.
கல்யாண முருங்கை இலையினை தண்ணீரில் ஊறவைத்து வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுத்தல், வெட்டை நோய்கள் குணமாகும்.
இந்த முருங்கையானது கர்ப்பபை பிரச்சனைகளை சரிசெய்யும். கருச்சிதைவிலிருந்து சிசுவைக் காப்பாற்றும் மற்றும் பெண் மலட்டுத் தன்மையை நீக்கும்.
Food For Women Health:
பெண்களுக்கு பெண் தன்மையை அளிக்கும் ,ஹர்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்கும் மிக அற்புதமான கீரை இது.
கல்யாண முருங்கையின் இலைகளை மாதந்தோறும் சமைத்துக் சாப்பிட்டால்,கருப்பையில் ஏற்படும் பிரச்சனைகள் எதுவும் அண்டாமல் போய்விடும்.
கல்யாண முருங்கையில் சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து அதிகம் நிறைந்துள்ளது.
இதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும்.
அத்துடன் இந்த இலைச் சாற்றை குடித்தால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும், பருத்த உடல் இளைக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கையின் மருத்துவப் பயன்கள்:
இந்த கீரையானது சிறுநீரகப்பிரச்சனையை சீர்செய்யும். சூடு மற்றும் பித்தநோய்களைகட்டுப்படுத்தும்.
கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.
கல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப் வைத்து குடித்தால் ரத்தசோகை குணமடையும்.
மேலும், இதனுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து பின் குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
குடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை ,சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
வயதான பெரியவர்கள் இந்த இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிப்பதன் மூலம் சரியாகும்.
மேலும், 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
Also Read: Diabetes Control Food: சர்க்கரை நோய்க்கு தீர்வளிக்கும் ஆரைக்கீரை..!
How To Cure Cold?
கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் பனி மற்றும் மழை காலத்தில் ஏற்படும் சளித்தொல்லையும் இருக்காது.
நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
இதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.
கல்யாண முருங்கை காய்ச்சலை குறைக்கும், மேலும் உடலை வலுவாக்கும்.
பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரமான இந்த கல்யாண முருங்கையின் பயன்களை அறிந்து உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.