இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Disadvantages of Soda Water: அடிக்கடி சோடா குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

Disadvantages of Soda Water: அடிக்கடி சோடா குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

அஜீரண கோளாறு ஏற்பட்டால் சோடா குடித்தால் சரியாகும் என்று அனைவருமே சோடா குடிப்பது வழக்கம்.

Disadvantages of Soda Water

Disadvantages of Soda Water:

அஜீரண கோளாறு எப்படி வருகிறது என்று பார்த்தால் நாம் சாப்பிடும் உணவானது வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிடாமல் இருக்கும் போது செரிமான கோளாறு ஏற்படுகிறது.

இவ்வேளையில் உணவு செரிமானம் ஆகவில்லையென்றால் நிச்சயம் ‘ஏப்பம்’ வராது. உடனே நாம் செரிமானத்திற்காக சோடா வாங்கி குடிக்கிறோம், உடனே ஏப்பம் வருகிறது.

ஆனால், இந்த ஏப்பம் எப்படி வருகிறதெனில் சோடா ஒரு வாயு நிறைந்த திரவம். இதை குடிக்கும் போது இரைப்பையில் இந்த வாயு வெளிப்பட்டு ஏப்பமாக வருகிறது.

சோடாவை சாப்பிட்டு முடித்தபின் மட்டுமல்ல, சாதாரண நேரங்களில் குடித்தால் கூட ஏப்பம் வரும்.

நம்மில் பல பேர் உணவை எடு‌த்து‌க் கொள்ளும் போதும் சரி உணவை எடுத்துக் கொண்ட பின்னரும் சரி இந்த கார்பனேட்டேடு பானங்களை தான் விரும்பி அருந்துகின்றனர்.

அந்த அளவுக்கு இதன் சுவைக்கு மக்கள் அடிமையாகி இருக்கிறார்கள்,

ஆனால் நாம் சோடாவினை அதிகம் அருந்துவதால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சோடாவில் கூடுதல் சர்க்கரைகள் சேர்க்கப்படுகிறது. இது பல சுகாதார பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.

சோடா பானங்களில்  சுக்ரோஸ் இருப்பதால் அது ஹார்மோன்களைத் தடுக்கிறது,  நம் உடலில் கலோரிகள் அதிகமாகிறது. இது உடல் பருமன் மற்றும் பிற நோய்களுக்கு வழி வகுக்கிறது.

அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னியில் சேதம் ஏற்படும். அது டயட் சோடாவாக இருந்தாலும் சரி இதே பாதிப்பு ஏற்படும்.

சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து இதயம் தொடர்பான  பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புண்டு.

மேலும், சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் அதில்  சேர்க்கப்படுகிறது.

இது, குடல், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக  கூறப்படுகிறது.

சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கிவிடும்.

இவற்றில் உள்ள போஸ்பொரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை  தளர செய்திடும்.

சோடாவை தினமும் குடித்தால் முதுமையில் அல்சீமர் நோய்க்கு இது காரணமாக அமையும்.

இதனால் ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

அடிக்கடி சோடா குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும்   அதிகரிக்கும் குளுகோஸ், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு பெருக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுத்தும்.

பிரக்டோஸ் சிரப்:

சோடாவில் பெரும்பாலும் அதிக பிரக்டோஸ் சிரப் அதிகமாக உள்ளது, இது  கல்லீரல் வழியாக செயலாக்கப்பட்டு, கல்லீரலுக்கு அதிக சுமையை கொடுப்பதோடு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

இதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகிறது,மேலும் குறைந்த ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கிறது.

Also Read:Foods To Avoid During Cough & Could: சளி, இருமல் இருந்தால், இந்த உணவுகளை தயவு செய்து சாப்பிடாதீங்க!

இந்த கார்பனேட் பானங்கள் இயற்கையாகவே நம் உடலை நச்சுத்தன்மை ஆக்குகிறது.

எனவே இவ்வகை சோடாவை கைவிட்டு ஆரோக்கியமான பானங்களை அருந்தி சிறந்த உடல்நலனை பெறுவோம்.

.