Poha Benefits: சமைக்காத அவல் சாப்பிட்டால் எடை குறையுமா?
Poha Benefits : சமைக்காத அவல் சாப்பிட்டால் எடை குறையுமா?
அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி ஆகும்.

Poha Benefits:
பன்னெடுங்காலமாக அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
அவலானது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி கிடைக்கிறது.
அவல் முன்பு கைகுத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. இப்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது.
அரிசியில் இருந்து வெள்ளை அவல், சிகப்பு அவல் போன்றவைகளுடன் தற்போது தினை அவல், கம்பு அவல், சோளஅவல், கேழ்வரகு அவல் போன்ற விதவிதமான அவல்கள் தற்போது இயற்கை அங்காடிகள் மற்றும் விற்பனை கூடங்களில் கிடைக்கின்றன.
இந்த அவலினை இந்தியாவிலும், தமிழகத்திலும் சமைக்கப்படாத உணவாக இறைவனுக்கு படைக்கப்படும் உணவு பொருளாக சிறப்பித்து வருகின்றனர்.
அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
வெள்ளை நிறத்தில் தோற்றம் அளிக்கும் இந்த அவலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அரிசியின் மறு உருவமே அவல்.
இதனை சமைக்காமல் சாப்பிட்டால் பலன் கிடைக்குமா என்றும் அவல் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா! என்றும் கேள்வி எழுகிறது.
இதனை பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்!
அவல் சாப்பிடுவது எடைக்குறைப்புக்கு நிச்சயம் உதவாது. ஏனென்றால் 100 கிராம் சாதாரண அவலில் 77 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கார்போஹைட்ரேட் மட்டும்தான் இருக்கும்.
சிவப்பு அவல் அல்லது சிறுதானிய அவல் சாப்பிடுவதாக இருந்தால், ஒரு கப் அவலுக்கு, 3 கப் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.
கூடவே புரதச்சத்துக்குத் தேவையான வேர்க்கடலையை வறுத்து முழுதாகவோ, பொடித்தோ அதில் சேர்க்கலாம்.
இப்படிச் சாப்பிடுவது நல்ல ஆற்றலைத் தருமே தவிர, எடைக்குறைப்புக்கு உதவாது.
சமைக்காத அவலிலும் அதே அளவு கார்போஹைட்ரேட்தான் இருக்கும் என்பதால் சமைத்த அவலுக்கும் அதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
வளரும் குழந்தைகளுக்கு அவல் கொடுக்கலாம். அவலை வறுத்து, வேர்க்கடலை அல்லது நட்ஸ் சேர்த்து நொறுக்குத்தீனியாகக் கொடுக்கலாம்.
கெட்டியான அவலை 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்துகொள்ளவும். அதில் துருவிய தேங்காயும், வெல்லத்தூளும், ஏலக்காய் தூளும் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
இது இரத்தச்சோகையைப் போக்கும் என்பதால் பெண்களுக்கு பயனுள்ள உணவாக இது காணப்படும்.
Also Read: Kitchen Tips and Tricks: இல்லத்தரசிகளுக்கு உதவும் விதமாக அமையும் சமையல் குறிப்புகள்:
எனவே சாதாரண அவலோ, சிறுதானிய அவலோ, எதுவும் எடைக்குறைப்புக்கு உதவாது என்பதை அறிந்துக்கொள்வோம்.