Jackfruit seed benefits: பலாப்பழ விதைகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!
Jackfruit seed benefits: பலாப்பழ விதைகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!
கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோர் பண்டைய கால உணவு முறைக்கு மாறி வரும் இந்த காலகட்டத்தில், சில உள்ளூர் உணவுகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

Jackfruit seed benefits
அத்தகைய ஒரு உணவுப் பொருள் தான் ‘பலாப்பழம் விதைகள்’ அதாவது பலாப்பழத்திற்குள் இருக்கும் கொட்டைகள்.
நாம் இழந்த உணவுகளை மீட்டெடுக்க வேண்டும். எப்படி? பலாப்பழ விதைகளை கொண்டு ருசியான உணவு வகைகளை செய்யலாம்.
பலாப்பழம் விதைகளில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது.
இதனால் உங்கள் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் இது வழங்குகிறது. மேலும் இதன் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பலாப்பழ விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் என அறியப்படுகிறது.
எனவே பலாப்பழ விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்.
பார்வை திறன்
பலாப்பழ விதைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கண்புரை, மாகுலர் சிதைவு எனும் கண் பிரச்சனைகளை தடுக்கிறது.
புரத உள்ளடக்கம் நிறைந்த இந்த பலாப்பழ விதைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன.
உடனடி பலனை பெற, உங்கள் வழக்கமான உணவு பட்டியலில் இதனை சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பலாப்பழக் விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.
பலாப்பழ விதைகளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போராடுகிறது.
பொலிவான சருமத்தை பெற, நீங்கள் பலாப்பழ விதைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து உங்கள் சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்ச்சிக்கு நல்லது
பலாப்பழ விதையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, முடி உடைவதைத் தடுக்கிறது. இந்த கொட்டையில் உள்ள அதிகமான புரதச் சத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
இரும்பு சத்து இந்த விதையில் அதிகம் உள்ளதால், இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது.
Also Read: Benefits of tea: காலையில் எழுந்ததும் குடிக்கிற காபி, டீயை எப்படி ஆரோக்கியமாக மாற்றலாம்..!
இரும்புச் சத்து நிறைந்த இந்த விதைகள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுவதால் இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழ விதைகளை அதிகம் சாப்பிடலாம்.
மேலும் பலாப்பழ விதையில் உள்ள மங்கனீஸ் , இரத்தம் உறைதலை சீராக்குகிறது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் அன்றாட உணவில் பலாப்பழ கொட்டைகளை சேர்த்து கொள்ளுங்கள்.