Tell Me A Fun Fact: உங்களுக்கு தெரியுமா..! பூனைகளுக்கு மனிதர்களை விட எலும்புகள் அதிகம்
Tell Me A Fun Fact: உங்களுக்கு தெரியுமா..! பூனைகளுக்கு மனிதர்களை விட எலும்புகள் அதிகம்
நம்ம வீட்டுல வளக்குற செல்லபிராணியில் ஒன்று பூனை, அந்த பூனைக்கு மனிதர்களை விட நிறைய எலும்புகள் இருக்குனு சொன்னால் நீங்க நம்புவீங்களா?

ஆமாங்க நம்பிதான் ஆகணும், பொதுவாக மனிதர்களின் உடலில் 206 எலும்புகள் மட்டும் தான் இருக்கும், ஆனால், நம் வீடுகளில் பெரும்பாலாக வளர்க்க கூடிய செல்லப்பிராணிகளில் ஒன்றான பூனைகளுக்கு, மனிதர்களை விட எலும்புகள் அதிகம்,
இவ்வளவு சிறிதாய் இருக்கும் பூனைக்கு நிறைய எலும்புகள் இருக்குமானு தானே கேட்குறீங்க,
பூனைகளின் உடலில் 240 எலும்புகள் இருக்கிறது, இந்த எலும்புகள் மனிதர்களை விட அதிகமானது மட்டும் அல்லாமல், மற்ற விலங்குகளை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.
இதை காட்டிலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 240 எலும்புகளிலும் 10 சதவீதம் எலும்புகள் அதன் வால் பகுதியில் தான் இருக்கிறது.
மேலும், பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடைப்பட்ட எலும்பு கிடையாதாம்.
ஆச்சரியமாதான் இருக்குல கேட்கும் போது …..
உலகின் காஸ்ட்லியான உப்புவகை எது தெரியுமா?
பெரும்பாலும் உலக அளவில் உப்போட விலை ரொம்ப ரொம்ப கம்மிதான். ஆனால், உலகத்திலேயே காஸ்ட்லியான உப்பு ஒன்று உள்ளது. என்ன நம்ம முடியலையா…

கொரிய மூங்கில் உப்பு (Korean Bamboo salt) இந்த வகை உப்பு தான் உலகின் விலை உயர்ந்த உப்பாகக் கருதப்படுகிறது.
இந்த உப்பைத் தயாரிக்கும் சிக்கலான முறை மற்றும் அதற்காகப் போடப்படும் மனித உழைப்பு என இவை இரண்டும்தான் விலை அதிகமாக இருக்கக் காரணம். அது சரி..
இதை எப்படி தயாரிக்கிறார்கள்?வாங்க பார்ப்போம்…
சாதாரண உப்பை மூங்கில்களில் அடைத்து, அதிகப்படியான வெப்பநிலையில் அதை சூடாக்குகிறார்கள்.
ஒரு கட்டத்தில் மூங்கிலில் இருக்கும் சத்துகள் அனைத்தும் உப்பில் ஏறி, அதன் நிறத்தையே பழுப்பாக மாற்றுகிறது.
பழுப்பு நிறத்தில் பாறைபோல் எடுக்கப்படும் இந்த உப்பு, அதன் பின்னர் உடைக்கப்பட்டு, தூளாக்கப்படுகிறது.
கொரிய மூங்கில் உப்பு 250 கிராமின் விலை கிட்டத்தட்ட ரூ.7,500 (100 அமெரிக்க டாலர்கள்) என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உப்பில் அதிக அளவில் இருக்கும் இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன.
இவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோய் பாதிப்பைத் தவிர்க்கலாம், பற்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் மற்றும் இவை செரிமானத்துக்குப் பெரிய அளவில் உதவி செய்யும்.
இதுனால தான் இந்த உப்பு காஸ்ட்லியா?
இந்த உயிரினத்தால் நாக்கை வெளியில் நீட்ட முடியாதா!
பொதுவாக இந்த உலகத்துல இருக்குற எல்லா உயிரினங்களினாலும் தங்களுடைய நாக்கை வெளியில் நீட்ட முடியும்.
ஆனால் முதலையால் தன்னோட நாக்கினை வெளியில் நீட்ட முடியாது.
என்ன ஆச்சரியமா இருக்கா …..

பொதுவாக விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களாலும் தனது நாக்கினை வெளியில் நீட்ட முடியும், ஆனால் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய முதலையால் தனது நாக்கினை வெளியில் நீட்ட முடியாது.
அதற்கு காரணம், முதலைகளின் நாக்கு அதன் நாடியில் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆகையால் தான் மற்ற விலங்குகளை போல முதலையால் தன் நாக்கினை வெளியில் நீட்ட முடியாது.
ஒரு தடவை டெஸ்ட் பண்ணிப்பாக்க போறீங்களா….ஹா ஹா ஹா
மழையே பெய்யாத கிராமமா?
உலகத்துலயே மழையே பெய்யாத கிராமம் ஒன்று இருக்கு அப்டினா அது வித்தியாசமான கிராமம் தானே.
மழை பெய்யவில்லை என்றால், பசுமை இருக்காது, மரம் வளராது, வறட்சியால் புல் கூட முளைக்காது, மக்கள் பசியால் இறக்கும் நிலைமை கூட வரும்.

ஆமாங்க, மழை பெய்யவில்லை என்றால், பசுமை இருக்காது, மரம் வளராது, வறட்சியால் புல் கூட முளைக்காது, மக்கள் பசியால் இறக்கும் நிலைமை கூட வரும்.
அது போல், ஒரு கிராமமே உள்ளது. அந்த கிராமம், வடக்கு சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் இருக்கும் Calama என்ற கிராமம் தான்.
இந்த கிராமத்தில் தான் மழை சுமார் 1501-ம் வருடத்திலிருந்து இப்பொழுது வரையிலும், அதாவது 400 வருடங்களாக, ஒரு தடவை கூட இந்த இடத்தில் மழை பெய்யவில்லை.
அதனால் தான் இந்த உலகத்திலேயே இந்த கிராமத்தை வறட்சியான இடம் என்று சொல்கிறார்கள்.
மழையே இல்லாம எப்படித்தான் வாழுறாங்களோ..…
உங்களுக்கான கேள்விகள்:
கேள்வி: சின்ன மீசைக்காரன் நிறைய எலும்புகளை கொண்ட கெட்டிக்காரன் அவன் யார்?
விடை : பூனை
கேள்வி: உலகின் விலைஉயர்ந்த உப்பு எது?
விடை : கொரிய மூங்கில் உப்பு
கேள்வி: வந்தும் கெடுக்கும் வராமலும் கெடுக்கும் அது என்ன?
விடை : மழை
கேள்வி: உருவத்தில் பல்லி போன்றவன், ஆனால் இவனுக்கு நாக்கு இல்லை?
விடை : முதலை