Eye Twitching : கண் இமைகள் அடிக்கடி துடிக்குதா..? என்ன காரணம்..? சரி செய்யும் வழிகள்..!
Eye Twitching : கண் இமைகள் அடிக்கடி துடிக்குதா..? என்ன காரணம்..? சரி செய்யும் வழிகள்..!
நம் கண் இமைகள் துடிப்பது ஆபத்தானது இல்லை என்றாலும் அதை கண்டுகொள்ளாமல் விடாதீர்கள்.

Eye Twitching Reason :
இது ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் என்றாலும் இதுவே நாட்கள் செல்ல செல்ல பல்வேறுவிதமான சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நம் கண் இமைகளில் ஒரு கண் இமை மட்டும் தானாக துடிப்பதை பலரும் அனுபவித்திருப்பீர்கள்.
இது சில நொடிகள் மட்டுமே துடிக்கும் என்றாலும், அதுவும் உடல் உங்களுக்கு தரும் எச்சரிக்கைதான்.
ஒருவேளை நிமிடக்கணக்கில் அல்லாமல் நீண்ட நேரம் அல்லது தினமும் கண் இமை துடிக்கிறது எனில் அதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன.
கண்ணிமைகள் ஏன் திடீரென துடிக்கின்றன?
மன அழுத்தம், அதிக அளவு கஃபைன் (caffeine)உட்கொள்ளல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை, கண் வறட்சி ஆகியவை தான் கண் துடிப்புக்கு முக்கிய காரணம்.
மது அருந்துதல், ஸ்கிரீன் பிரைட்னஸ், இமையின் உள்பக்கம் உறுத்தல், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், தலைசுற்றுவது போன்ற உணர்வு, மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவையும் கண்ணிமை துடிப்புக்கு காரணமாவதோடு, அதை அதிகப்படுத்தவும் செய்யும்.
கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும்.
போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, மன அழுத்தம், சோர்வு போன்ற காரணங்களால் கண்களானது வறட்சியடைகிறது.
ஆகவே, இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து விடுபடலாம்.
சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் எனக் கூறுகிறது.
மெக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும். ஆகவே, சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.
கண் இமை துடிப்பதனை தடுக்கும் வழிகள்:
கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை நம் இரு இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம்.
ஹைட்ரோதெரபி என்ற இந்த முறையில், தண்ணீரை தெளிக்கும்போது கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும்.
வெதுவெதுப்பான நீர்படும்போது இரத்தநாளங்கள் விரிவடைந்து கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரத்துக்கு (30 விநாடிகள்) மசாஜ் செய்யலாம்.
இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்கும்.
நம் கண்களை முடிந்த அளவு இறுக்கமாக மூடி, பிறகு முடிந்த அளவு விரிவாக திறக்கவும். கண்ணீர் வருமளவுக்கு தொடர்ந்து இப்படி செய்யவேண்டும்.
இது கண்கள் மற்றும் முகத்தின் தசைகள்,விரிவடையச் செய்வதோடு, கண்களுக்கு நீர்ச்சத்து கிடைக்குமாறும், இரத்த ஓட்டம் அதிகரிக்குமாறும் செய்யும்.
இமைகளுக்கு இது ஓய்வையும் தரும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணிமை துடிப்பு அதிகமானால் அல்லது வலி ஏற்பட்டால் நிறுத்திவிடவும்.
இதனால் மோசமான பாதிப்பு இல்லை என்றாலும் இந்த பாதிப்பின் தொடக்கம் பல விதங்களில் நம்மை பாதிக்கும்.
Also Read: Boiled egg health benefits: 14 நாட்கள் தொடர்ந்து வேக வைத்த முட்டை சாப்பிட்டால்…
ஊட்டச்சத்து குறைபாட்டாலும் ஏற்படும் இந்த கண்சிமிட்டல் நாள் கணக்கில் செல்ல செல்ல பல்வேறுவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
எனவே இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் அதை தடுக்கும் வழியினை மேற்கொள்ளுங்கள்.