News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்

Benefits Of Bhringraj:கரிசலாங்கண்ணிக் கீரையின்மருத்துவப் பயன்கள்..!

Benefits Of Bhringraj:கரிசலாங்கண்ணிக் கீரையின்மருத்துவப் பயன்கள்..!

கரிசலாங்கண்ணிக் கீரையின் பயன்கள்:

கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு.

  • மஞ்சள் கரிசலாங்கண்ணி
  • வெள்ளை கரிசலாங்கண்ணி

இதன் வேறுபாடுகளை அதன் பூக்களின் நிறத்தை வைத்து அடையாளம் காணலாம். ஆயுர்வேதத்தில் இது பிரிங்கராஜ் என்று அழைக்கப்படுகிறது.

Benefits Of Bhringraj

வேறுபெயர்கள்:

கரிசலாங்கண்ணிக்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) போன்ற வேறு பெயர்கள் உள்ளன.

இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இக்கீரைக்கு கரிசலாங்கண்ணி என்ற பெயர் வந்தது.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

நீர் =85%
மாவுப்பொருள்=9.2%
புரதம் =4.4%
கொழுப்பு =0.8%
கால்சியம் =62 யூனிட்
இரும்புத் தாது =8.9 யூனிட்
பாஸ்பரஸ் =4.62%

இவை அனைத்தும் ஒரு 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

நம் முன்னோர்கள் கரிசலாங்கண்ணி இலையை காய வைத்து பொடித்து, பல் துலக்க பயன்படுத்தி வந்தார்கள். தங்கள் அன்றாட உணவில் கூட துவையல், கீரை கடைசல்,பொரியல் செய்து சாப்பிட்டு வந்தனர்.

ஆனால், இன்றைய காலத்தில் எல்லாம் மாறி விட்டது, இப்போது இதனை மருந்திற்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.

கரிசாலை தைலம் தயாரிக்கும் முறை:

கரிசலையின் இலைச்சாறு 70 மி.லி எடுத்து, நல்லெண்ணெய் 700 மி.லி சேர்த்து சிறு தீயில் பக்குவமாக தைலம் போன்று காய்ச்சிக்கலாம்.

இந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் குறையும், காதுவலி நீங்கும்.

Benefits Of Bhringraj:

ஜலதோஷம் குறைய:

இதன் இலைசாறை 2 துளி எடுத்து தேன் கலந்து கை குழந்தைகளுக்கு கொடுத்தால் ஜலதோஷம் சரியாகும்.

காதுவலி குணமாக:

காதுவலி உள்ளவங்களுக்கு இந்த இலைச் சாற்றை காதினுள் ஊற்றினால் வலி தீரும்.

யானைக்கால் நோய்:

கரிசலாங்கண்ணியை நல்லெண்ணெயுடன் அரைத்து யானைக்கால் நோயுள்ளவங்களுக்கு மேல்பூச்சாக பூசலாம்.

சிறுநீரில் இரத்தம்:

சிறுநீரில் இரத்தம் வந்தால் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றை கால் முதல் அரை அளவு வரை தினமும் இருவேளை குடிக்கலாம்.

தேள் கடி:

இதன் இலையை அரைத்து தேள் கடித்த இடத்தில் தேய்த்து, அதை ஒரு துணியால் கட்டி வைத்தால் நஞ்சு நீங்கும். கூடவே இதன் இலையை வேக வைத்து ஆவி பிடித்தால் மூல நோய் குணமாகும்.

தலை முடி கருப்பாக:

தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி போட்டு காய்த்த கூந்தல் தைலத்தை, தினமும் தலையில் தடவி வந்தால், தலைமுடி கறு, கறு என்று இருக்கும்.

தொப்பை குறைய:

தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி மூன்றையும் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடிக்கலாம்.

இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.

ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் சுவாச நோய்கள் தீர்ந்து போகும்.

இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்படவும் வைக்கிறது.

Remedies For Anemia:

இரத்த சோகை நீங்க :

உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து உடல் சோர்வு ஏற்படும்.

இரத்தசோகை நோயால் அவதிப்படுகிறவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தச் சோகை நீங்கும்.

How To Strengthen Liver:

கல்லீரல் பலப்பட:

உடலின் செயல்பாடுகளை தூண்டுவதும், செயல் படுத்துவதும் கல்லீரலின் முக்கிய பணியாகும். கல்லீரல் நன்கு செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும்.

மது பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் எளிதில் பாதிப்படைந்து விடும். இதனால் இவர்களின் கண்கள், மூளை, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்.

கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் அதிகமாக சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுவதால் காமாலை நோய் உருவாகிறது.

கரிசலாங்கண்ணியின் இலை, வேர், காய், பூ இவற்றை நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும்.

Also Read:Anti Inflammatory Diet: வியப்பூட்டும் அகத்திக் கீரையின் பயன்கள்..!

கரிசலாங்கண்ணி தேநீர் செய்யும் முறை:

கரிசலாங்கண்ணிக் கீரையினை நன்றாக காயவைத்து பொடி செய்து சேகரித்து வைத்துக்கொண்டு, கூடவே இரண்டு மிளகு, ஒரு ஏலக்காய், இரண்டையும் பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின் இதனுடன், கரிசலாங்கண்ணிக் கீரையின் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு 1 1/2 டம்ளர் நீரில் வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அந்தக் கலவை கொதித்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி குடிக்கலாம்.

இந்த தேநீரை தினமும் காய்த்து பருகினால் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் விலகி போகும், கூடவே பருவகாலங்களில் வரக்கூடிய தொற்று நோய் வராமல் தடுக்கலாம்.

தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது. பல ஆங்கில மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.

காமாலை வந்தால் காலனுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அந்த காலனை விரட்டி, காமாலையை அகற்ற கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *