Anti Cancer Foods: புற்று நோயை எதிர்க்கும் தன்மைக் கொண்டதா இந்த பருப்புக்கீரை..!
Anti Cancer Foods: புற்று நோயை எதிர்க்கும் தன்மைக் கொண்டதா இந்த பருப்புக்கீரை..!
பருப்புக்கீரை இதற்கு, தரைக்கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது ஓராண்டுத் தாவர வகையினை சார்ந்தது. இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ள அமைப்பைக் கொண்டு தரையிலிருந்து 40 செமீ உயரம் வரை வளர்ந்திருக்கும்.
சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை, அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை தான் இந்த பருப்புக்கீரை.
இத்தகைய சிறப்பு மிகுந்த கீரையால் மென்மேலும் எவ்வகை நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை விளக்கமாக காண்போம் வாருங்கள்.

பெண்களுக்கு உகந்தது :
பருப்புக்கீரையில் அதிக அளவில் விட்டமின் A,C மற்றும் விட்டமின் B ஆகியவை நிறைந்துள்ளன. மீன்களில் காணப்படும் ஒமேகா 3 என்னும் சத்து இக்கீரையில் அதிகம் அடங்கியுள்ளது.
இது உடலின் ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக் கூடியது. குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் செய்கிறது.
How To Remove Heat From Body ?
உடல் சூடு தணியும் :
வெயில் காலத்தில் உண்பதற்கு மிகவும் ஏற்றது இக் கீரை. பருப்புக் கீரை வைத்து மசியல் செய்து கூடவே குடிப்பதற்கு வசதியாக ஏதேனும் உணவு வைத்து, அதனுடன் மசியலையும் சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு போன்ற அழற்சிகள் தவிர்க்கப்படும்.
அதே போல கிராமங்களில் வெயில் காலத்தில் ஏற்படுகின்ற அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.
மலச்சிக்கல் சரியாகும் :
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து மலச்சிக்கல் நீங்கும்.
இதய ஆரோக்கியம் :
இதில் ஒமேகா 3 சரியான அளவு இருப்பதால் இது, இருதய நோய் மற்றும் பெருந்தமனியின் தோல் தடிப்பது போன்ற அழற்சிகளை முற்றிலும் குறைக்கும்.
இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைகிறது.
தைராய்டு சுரப்பிகள் :
பருப்பு கீரையில் தாமிரம் இருப்பதால், இது தைராய்டு சுரப்பியினை சரியான செயல்பாட்டில் வைப்பதற்கு உதவிபுரிகிறது.
இருப்பினும், அதிகப்படியான தாமிரம் தைராய்டு செயலிழப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே இரத்தத்தில் போதுமான அளவு மற்றும் தாமிரம் இருக்கவேண்டும்.
அவ்வாறு, இல்லையெனில் ஹார்மோன் செயல்பாடு தன் சமநிலையினை தவறி ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகளை உருவாக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தலைவலி :
இந்த பருப்புக்கீரையில் வைட்டமின் B2 இருக்கிறது, இது வலிமிகுந்த ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவும் வைட்டமின் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறவர்கள் இக்கீரையை உணவாக உண்ணலாம்.
Anti Cancer Foods:
புற்றுநோய் எதிர்ப்பு :
பருப்பு கீரையானது சரியான அளவு விட்டமின் C மற்றும் வைட்டமின் A ஆகியவற்றைக் கொண்ட சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.
இவ்விரண்டு விட்டமின்களும் சில புற்றுநோய்களை, குறிப்பாக நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.
மேலும் பருப்பு கீரையில் பீட்டாலைன் நிறமி கலவை நிறைந்துள்ளது. இந்த பீட்டாலைன் நிறமியால் தான் தாவரம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பெற்றுள்ளது.
இதிலுள்ள பீட்டா-சயனின்கள் மற்றும் பீட்டா-சாந்தின்கள் உடலில் ரெடிக்கல்களினால் ஏற்படும் புற்றுநோய்க்கு காரணமான செல்லின் சேதத்தை குறைக்கின்றன.
எலும்பு ஆரோக்கியம் :
பருப்புக்கீரையில் உள்ள தாதுக்களான இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை எலும்பு திசுக்களை உருவாக்குவதற்கும், உடலில் உள்ள எலும்புகளை குணப்படுத்தவும், அதன் செயல்முறையை விரைவு படுத்துவதற்கும் உதவுகின்றன.
Spinach For Weight Loss:
எடை இழப்பு :
பருப்புக்கீரையில் குறைந்த கலோரிகளும், அதிக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துகளும் நிறைந்து காணப்படுவதனால் பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து, அதனை நன்றாக தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும். வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.
காயம் ஆறுவதை எளிதாக்குகிறது:
பருப்புக் கீரையில் இரும்பு சத்து இருப்பதால் இது காயங்களை ஆற்றுவதில் விரைந்து செயல்படுகிறது.
இந்தக் கீரையில், ஹீமோகுளோபினின் மிக முக்கியமான, இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சீராக கடத்துவதன் மூலம், காயங்கள் ஆறுவதையும் எளிதாக்குகிறது.
மேலும், வியர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்ளங்கள் சரியாகவும் இக்கீரையை அரைத்து தடவலாம்.
பருப்புக் கீரை தீமைகள் :
பருப்புக் கீரையில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றன.
எனவே சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்கள் பருப்பு கீரை மற்றும் அதன் விதைகளை கவனத்துடன் சாப்பிடுவது நல்லது.