Hibiscus Flower : செம்பருத்தி டீ குடிச்சா உடம்புக்கு இவ்வளவு நன்மைகளா..?
Hibiscus Flower : செம்பருத்தி டீ குடிச்சா உடம்புக்கு இவ்வளவு நன்மைகளா..?
செம்பருத்தி பொதுவாக பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இயற்கை மருத்துவத்திற்கு இந்த செம்பருத்தி பல நம்மைகளை கொடுக்கிறது.

Hibiscus Flower:
செம்பருத்தி இலைகள், பூக்கள் அனைத்தும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது.
அந்த வகையில் செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
குருதி நெல்லியின் சுவையை ஒத்து இருக்கும் இதன் சுவை. பொதுவாக இந்த செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகலாம்.
ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரண்டு செம்பருத்தி பூக்களை ஒரு கப் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வரவும்.
4 அல்லது 5 செம்பருத்தி இதழ்களை மென்று சாப்பிட்டு வர அஜீரணகோளாறால் ஏற்படும் வயிற்று புண்களை குணமாக்கும்.
Hibiscus பூவை நெய்யில் வதக்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மேலும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
செம்பருத்திப்பூவின் இதழ்களை மென்று சாப்பிட உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
செம்பருத்தி டீயை காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலுக்கு எண்ணற்ற பயன்களை தருகிறது.
இதயம் சுருங்கி விரிய தேவையான வலிமையை தருகிறது.
இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
உடல் பருமனை குறைத்து உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
செம்பருத்தி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் காய்ச்சலால் ஏற்படும் சோர்வை நீக்கும்.
காய்ச்சலால் உண்டாகும் கிருமிகளை அளித்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் செம்பருத்தி டீ அவர்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகள், சரியான இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம்.
Also Read: Muskmelon: கிர்ணி பழம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!
செம்பருத்தி டீ போடும் முறை:
செம்பருத்தி இதழ் – 5 இதழ்
தண்ணிர் – 1 டம்ளர்
நாட்டு சர்க்கரை – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செம்பருத்தி பூவை தண்ணிரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
அதன் நிறம் மாறிய பின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து இறக்கினால் செம்பருத்தி டீ தயார்.
செம்பருத்தி டீயை காலை, மாலை பருகி வந்தால் நாம் உடலுக்கு பல மருத்துவ குணங்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்துடன் நாம் வாழலாம்…