Diabetes Control Food: சர்க்கரை நோய்க்கு தீர்வளிக்கும் ஆரைக்கீரை..!
Diabetes Control Food: சர்க்கரை நோய்க்கு தீர்வளிக்கும் ஆரைக்கீரை..!
ஆரை, இது சத்து மிகுந்த கீரை வகையினை சேர்ந்த ஒரு வகை தாவரமாகும்.
இனிப்புச் சுவையுடைய இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இவை செங்குத்தாக வளரும் இயல்பை உடையவை,
மெல்லிய தண்டும், நான்கு கால்வட்ட இலைகளையும் கொண்டுள்ளது, இது நீர்நிலங்களில் வளரக் கூடிய தாவரமாகும்.

தமிழகமெங்கும், நீர்நிலைகளிலும், வாய்க்கால்களிலும் இயல்பாக வளர்கின்றது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை வாய்க்கால்களில் அதிகமான அளவில் வளர்ந்திருப்பதைக் காணமுடியும்.
ஆரைக் கீரையாக அங்காடிகளில் விற்கப்படுகின்றது. ஆலக்கீரை, நீராரை போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. இதன் இலைகள் தான் மருத்துவப் பயன் கொண்டவை.
Arai Keerai Benefits:
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்:
ஆரை, சத்து மிகுந்த கீரையாகும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். தாகம் தணிக்கும்.
ஆரையானது, பசியைத் தூண்டும், ஆண்மையுணர்வைப் பெருக்கும், விந்து உற்பத்தியை அதிகரிக்கும், வெள்ளைப்படுதலையும் கட்டுப்படுத்தும்.
தாய்ப்பால் சுரப்பை நிறுத்த நினைக்கும் தாய்மார்கள் இந்தக்கீரையை அடிக்கடி சமைத்து உண்டால் பலன் கிடைக்கும்.
ஆரைக் கீரையினை உண்டால் மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவை நீங்கும். மேலும், இது முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கவும் உதவும் வகையில் உள்ளது.
ஆரை இலைகளைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
சரும நோய்கள் ஏதும் அண்டாமல் பித்தம் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
ஆரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மன அழுத்தப் பிரச்சனைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு மன அழுத்தம் சரியாகும்.
மேலும், ஆயுர்வேத மருத்துவத்தில் மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.
Diabetes Control Food:
இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த பலனளிக்கக் கூடியது. தொடர்ந்து ஆரைக்கீரையினை சமைத்து உண்டால், போதுமான சத்துகள் கிடைப்பதோடு நீரிழிவு நோயும் கட்டுப்படும்.
இந்தக் கீரையை சமைத்துண்ணவோ, சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்யலாம்.
மேலும், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் போன்றவை நீங்கும்.
ஆரைக்கீரை சூப் செய்முறை:
ஆரைக் கீரை – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
பூண்டுப்பல் – 3
மிளகு – 5
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
மேற்குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து குடிக்கலாம்.
Also Read:Benefits Of Bhringraj:கரிசலாங்கண்ணிக் கீரையின்மருத்துவப் பயன்கள்..!
How To Cure Urinary Infection?
சிறுநீர்க்கட்டு ,சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாக ஆரை இலையை மையாக அரைத்து, எலுமிச்சபழ அளவு எடுத்து, தேவையான அளவு எருமை மோரில் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இதனை குடித்தால் எளிதில் மாற்றம் உருவாகும்.
சிலருக்கு, சிறுநீருடன் இரத்தம் வருதல் நிகழும்,இந்நோய் கட்டுப்பட ஆரை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, 30 கிராம் தூளை ½ லிட்டர் நீரில் போட்டு, அதனை பாதிக்கு காய்ச்சி, கூடவே, பாலும், கற்கண்டும் கலந்து குடித்து வர வேண்டும். காலை, மாலை வேளைகளில் இவ்வாறு செய்யலாம்.
இது தவிர நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு முதலான சிறுநீர்த்தாரை தொற்று நோய்களும் குணமடையும்.
சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்படுவதற்கு ஆரையின், இலைகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, 30 கிராம் தூளை ½ லிட்டர் நீரில் போட்டு, பாதியாகக் காய்ச்சி, பாலும், கற்கண்டும் கலந்து குடித்துவர வேண்டும். காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம்.
குறிப்பு :
கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்போர்,கருவுற்றப்பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது அவசியம்.