News Tamil OnlineTamil NewsThatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Basil: வெயில் காலங்களில் உடலுக்கு தேவையான அற்புத மூலிகை: உடலுக்கு இதம் அளிக்கும் திருநீர் பச்சிலை..!

Benefits Of Basil: வெயில் காலங்களில் உடலுக்கு தேவையான அற்புத மூலிகை: உடலுக்கு இதம் அளிக்கும் திருநீர் பச்சிலை..!

பூக்களுக்கு மணம் இருப்பது பொதுவான ஒன்று தான். ஆனால், சில செடிகளில் இலைகளும் மணம் வீசுவதுண்டு.அத்தகைய சிறப்பு மிகுந்த மூலிகை தான் இந்த திருநீற்றுப் பச்சிலை.

Benefits Of Basil

Benefits Of Basil:

இந்தச் செடிகள் மலைப்பிரதேசங்களில் அதிகம் வளரும் தன்மைக் கொண்டவை,

பெரும்பாலும் திருநீர் பச்சிலை ஊரின் கோயில்களில் வளர்க்கப்படுகிறது.

இது உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதிபச்சிலை, திருநீத்துபத்திரி போன்ற பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.

இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் விதைகள் இனிப்பு சுவையுடையவை. இதுதான் சப்ஜா விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

அகத்திய முனிவர் இதே திருநீற்றுபச்சிலை வாந்தி, கபநோய்களை குணப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

விதைகள் இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் இதன் செடிகள் கார்ப்பு சுவையை கொண்டவை.

இது நுண்ணுயிர், வைரஸ் எதிர்ப்புத்தன்மைகள் கொண்டது. இதன் இலைகள் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறன.

துளசி தரும் நன்மைகள் அனைத்தும் இந்த மூலிகையிலும் கிடைக்கும். இதன் விதைகள் சப்ஜா விதை என்ற பெயரில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

நீரில் ஊற வைத்தால், நீரை உறிஞ்சிக்கொண்டு வழவழப்பாக மாறிவிடும் தன்மைக் கொண்டது.

நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும் வயிற்றுக்கும் நல்லது. சர்பத், பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.

இந்த திருநீற்றுப்பச்சிலை உடலுக்கு எவ்வித நன்மைகளை செய்கின்றன என்பது குறித்து காண்போம்;

Thiruneetru Pachilai

காய்ச்சலுக்கு திருநீர்ப்பச்சிலை:

அதிக காய்ச்சல் இருக்கும் போது உடலின் உள்ள கெட்ட நீர்கள் எல்லாம் நீங்கி உடலை கனமாக வைத்திருக்கும்.

இந்நேரத்தில், திருநீற்றுப்பச்சிலையினை முழுவதுமாக எடுத்து சுத்தம் செய்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் வியர்வை வெளியேறிவிடும்.

பிறகு உடல் கனமான உணர்விலிருந்து விடுபட்டு இலேசாக இருக்கும். உடனே, உடல் ஓர் புத்துணர்ச்சியையும் அடையும்.

உஷ்ணம் சம்பந்தமான நோய் அகல:

வெயில் காலங்களில் உடல் சூட்டினால் வயிற்று வலி, கண் எரிச்சல் சிறுநீர் அடைப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரநேரிடும். இந்த நோய்களுக்கு சிறந்த மருந்தாக திருநீற்றுப்பச்சிலை சப்ஜா விதைகள் உதவுகின்றன.

சப்ஜா விதைகளை எடுத்து இரண்டு மணி நேரம் நீரில் ஊறவிட்டு, பின் அதனுடன் சூடான நீரினை ஊற்றி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் உடலை விட்டு நீங்கும்.

இந்த பானம் சுவையாக இருக்கும். கூடவே, வெயில் காலத்தில் மலச்சிக்கல் இல்லாமல் மலத்தை வெளியேற்றி உடலை நெகிழ்வாக வைத்திருக்கும்.

What Are Basil Leave Good For You?

வியர்வை வாடை போக:

இந்த கோடைகாலங்களில் உடலில் வியர்வை நாற்றம் மிகவும் அதிகமாகவே இருக்கும், அதை போக்குவதற்கு நாம் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம்.

ஆனால், திருநீற்றுப்பச்சிலை இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். வாசனை திரவியம், சோப்பு, ஷாம்புக்கள்(shampoos) போன்ற எதுவும் இல்லாமல் திருநீற்றுப்பச்சிலை மட்டுமே கொண்டு வியர்வை நாற்றத்தை போக்க முடியும்.

குளிக்கும் நீரில் அரைமணி நேரத்துக்கு முன்பே ஒரு கைப்பிடி அளவு திருநீற்றுப்பச்சிலையின் இலைகளை எடுத்து நீரில் இட்டு குளித்து வந்தால் உடல் நறுமணமாக இருக்கும். இதனால் உடலும் சுத்தமாகவும் இருக்கும்.

தலைவலி பிரச்சனைக்கு:

தலைவலி பிரச்சனை அதிகமாக இருக்கும் போது, திருநீற்றுப்பச்சிலை இலையை அரைத்து தலையில் பற்றுபோடலாம்.
அல்லது, இலையை பறித்து உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி எடுத்து இலேசாக நுகர்ந்து பார்த்தால் கூட போதும் தலைவலி மறைந்து போகும்.

தூக்கமின்மை பிரச்சனை கொண்டிருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். மூக்கு கோளாறுகளும் சரியாகும்.

கண் கட்டி:

சிலருக்கு உடல் சூட்டினால் கண் இரைப்பையில் கட்டி உருவாகும், இது உஷ்ணகட்டியாக இருந்தாலும் பருக்களாக இருந்தாலும் அது உபாதையை உண்டு செய்யும்.

இதை போக்க திருநீற்றுப்பச்சிலையை அரைத்து கண்களின் மீது வைக்கலாம்.

தொடர்ந்து கட்டிகள் மீது இவ்வாறு பூசி வந்தால் கட்டிகள் அப்படியே அமுங்கிவிடும். பெரிதாக மாறாமல் அவ்வாறே மறைந்து விடும்.

சில கட்டிகளின் மேல் உள் சீழ் இருந்தால் அதையும் வெளியேற்றி சுத்தம் செய்யும். இந்த திருநீற்றுப்பச்சிலையின் சாறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புண்களும் வெகுவிரைவில் ஆறிவிடும்.

Also Read: Radish Leaf Benefits: முள்ளங்கி இலையின் பயன் அறியாமல் அதை தூக்கிப்போடுகிறீர்களா..? இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்..!

முகப்பரு, சரும நோய்களுக்கு:

அதிக முகப்பரு இருப்பவர்கள், திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு பொடியை கலந்து குழைத்து பருக்களில் பூசி வந்தால் எளிதில் முகப்பரு குணமாகும்.

பருக்கள் கடினமாக இருந்தால் அதை வடுக்கள் இல்லாமல் நீக்க திருநீற்றுப்பச்சிலை ஒன்றே சிறந்தது என்று கூறலாம்.

தேமல், படை முதலிய சரும நோய்கள் இருந்தால் இதன் இலைச்சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தி வந்தால் இந்த படை நோய்கள் எல்லாம் குணமாகிவிடும்.

விஷப் பூச்சிகள் ஏதேனும் கடித்தால் அந்த இடத்தில் திருநீற்றுப்பச்சிலை சாறை சருமத்தில் பயன்படுத்தினால் உடலில் கடித்ததன் விஷம் இறங்காமல் நிற்கும்.

இத்தகைய நன்மைகளை கொண்டது இந்த திருநீற்று பச்சிலை.