Aloe Vera For Face : தொலைந்து போன தோலின் அழகை திரும்ப கொடுக்கும் கற்றாழை..!
Aloe Vera For Face : தொலைந்து போன தோலின் அழகை திரும்ப கொடுக்கும் கற்றாழை..!
கற்றாழை ஓர் பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்தது, இது தமிழில் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது.
கற்றாழைச் செடி பெரும்பாலும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரக்கூடியவை . இதன் நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். இதன் மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் சித்த மருத்துவத்தில் கற்றாழை பெருமளவு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

Aloe Vera For Face :
கற்றாழையின் வகைகள்:
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழையெனப் பல வகைகள் உள்ளது.
இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கற்றாழையின் இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.
கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிறத் திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சையெனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழையில் முதிர்ந்தவற்றில் தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.
தோற்றத்தில் மட்டுமல்ல மருத்துவத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகுதான். அதன் பயன்கள் என்னென்ன என்பதை காண்போம் வாருங்கள்.
Natural Skin Care Tips :
தோலுக்கு கிடைக்கும் நன்மைகள்:
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் நமக்கு வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.
அவ்வகையில், கற்றாழையைக் கொண்டு தோலை பாதுகாக்கும் கீரிம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை காண்போம்.
தேவையான பொருட்கள்:
ஆலிவ் வேரா ஜெல் -1 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – 1/2 தேக்கரண்டி
ஓட்ஸ் -1 தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:
ஆலிவ் வேரா ஜெல், ஆலிவ் ஆயில், ஓட்ஸ் போன்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு கலக்க வேண்டும்.
கலந்த ஜெல்லினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே உலர விட வேண்டும். பின்னர், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவிய பின்னர் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து இளமையும் தோன்றும்.
கற்றாழை முகத்தை பொலிவு தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெறவும் செய்கிறது.
முகப்பருவை தடுத்து அழகை மெருகேற்ற:
கற்றாழையின் ஜெல் முகத் தோலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும்.
மேலும், முகப்பருக்களை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையும் கொண்டுள்ளது.
பயன்படுத்தும் முறை :
கற்றாழைச் சாறுடன் சிறு துளி எலுமிச்சை சாறும் சேர்த்து அக் கலவையினை பயன்படுத்தினால் சரும நோய்கள் நீங்கும்.
தழும்புகளை நீக்கும் குணங்களும் இதில் உள்ளது. எலுமிச்சை சாறுடன் இந்த கற்றாழை ஜெல் இணைந்து முகப்பருக்களை வேருடன் அழிக்கும் தன்மையினைப் பெற்றுள்ளது.
சூரியனிள் வெப்பத்திற்கு ஏற்றவாறு எலுமிச்சை சாறினை குறைத்துக் கொள்வது நல்லது.
சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாக்கும்:
கற்றாழை ஜெல்லானது சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கிறது. எரிச்சல் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் கற்றாழை ஜெல்லினை நேரடியாக பூசிக் கொண்டால் குளிர்தன்மை கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளது. இது புறஊதாக் கதிர்களிடம் இருந்து நம் சருமத்தினைக் காக்கிறது.
தழும்புகளைக் குறைக்கும் கற்றாழை :
தோல் சுருக்கம் மற்றும் முகத்தில் ஏற்படும் தழும்புகளுக்கு சிறந்த ஓர் மருந்தாக இந்த கற்றாழை ஜெல் பயன்படுகிறது.
முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் ஏற்படும் தழும்புகளை மறைய செய்ய பயன்படுகிறது.
How To Get Thicker Hair?
முடி அடர்த்தியாக வளர :
கற்றாழை ஜெல்லானது சரும பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, முடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வினை அளிக்கிறது. கூடவே, அடர்த்தியான முடிகள் வளரவும் இவை உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கற்றாழை ஜெல் -2 தேக்கரண்டி
கடகு எண்ணை – 1 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
முதலில் கற்றாழை ஜெல் மற்றும் கடகு எண்ணெய்யினையும் நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் அந்தக் கலவையினை உச்சந்தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்து விடவேண்டும்.
ஓர் இரவு கழித்து அடுத்த நாள் குளிக்கும் போது தலையினை நன்றாக சேம்பு போட்டு கழுவி விடவேண்டும்.
இந்த கற்றாழை ஜெல்லானது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை அகற்றி அடர்த்தியான முடியினை வளர செய்யும்.
பொடுகுத் தொல்லை நீங்க:
தலையில் பொடுகு ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. தலையில் அதிக எண்ணெய் இருத்தல், தேவையற்ற இறந்த செல்கள், ஒழுங்காக பேணாமல் இருத்தல், உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும்.
கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி இந்த அனைத்து பிரச்சனையினையும் தீர்க்கும் தன்மை வாய்ந்தது.
கொழுப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த:
கற்றாழை ஜெல்லானது கொழுப்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்த பயன்படுகிறது.
மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக நடைமுறை செய்ய உதவுகிறது.
குறிப்பாக, நீரழிவு நோய் உள்ளவர்கள் இந்த ஜெல்லினை தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது. மருத்துவத் துறையிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக எப்படிப்பட்ட கற்றாழையினை தேர்வு செய்வது மற்றும் அதை எவ்வாறு பராமரிப்பது என்று காண்போம்.
கற்றாழைச் செடியில் இருந்து ஓர் இலையினை மட்டும் வெட்டினால் அதிலிருந்து மஞ்சள் நிற அமிலம் வெளியேறும். அமிலத்தை முழுவதுமாக நீக்கியப் பின்பு நீரில் கழுவி பின்பு அதனை பயன்படுத்துவது நல்லது.
Also Read : Best Food For Skin : சரும வியாதிகள் போக்க சிறந்ததா இந்த பரட்டைக் கீரை..!
பின், கற்றாழையின் மேல் உள்ள பச்சை நிறத் தோலினை முட்களுடன் சேர்த்து நீக்க வேண்டும், உள்ளே உள்ள கண்ணாடிப் போன்ற வெள்ளை நிற ஜெல்லினை தான் பயன்படுத்த வேண்டும்.
இதனை கத்தி அல்லது தேக்கரண்டி மூலம் எளிதில் எடுத்துக் கொள்ளலாம்.இந்த ஜெல்லை பிரிஜ்ஜில் வைத்துகூட சேகரித்து வைக்கலாம்.
இவ்வாறு சேகரித்த ஜெல்லை நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள முறைகளின் படி பயன்படுத்தலாம்.