News Tamil OnlineTamil Technology NewsToday Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்பழங்கள்

Benefits Of Eating Grapes: திராட்சையில் இவ்வளவு நன்மைகளா..!

Benefits Of Eating Grapes: திராட்சையில் இவ்வளவு நன்மைகளா..!

பழங்களில் திராட்சை என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று, அதிலும் பச்சை திராட்சை தான் எல்லோராலும் அதிக அளவு விரும்பி உண்ணுகிறார்கள்.பச்சை திராட்சை சாப்பிடவும் சுவையாக இருக்கும். மேலும், இதில் ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் போன்றவையும் நிறைந்துள்ளன.

இந்த சுவைமிக்க திராட்சை பழங்களை உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை மேலும் காண்போம் வாருங்கள்.

Benefits Of Eating Grapes

வைட்டமின் சக்தி:

திராட்சை பழங்களில், வைட்டமின் C, மற்றும் வைட்டமின் K போன்ற சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன.

மேலும் கால்சியம், ரைபோபிளவின், மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிகம் நிறைந்துள்ளன.

இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் எலும்புகள் மற்றும் பற்கள் இரண்டிற்கும் உறுதியான பலத்தை அளிக்கவும், ரத்தக்காயம் ஏற்பட்டால் ரத்தம் வெளிவருவது வேகமாக குறையவும் உதவுகிறது.

How To Prevent Constipation ?

மலச்சிக்கல்:

சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது, அத்தகையோர், நார்ச்சத்துகள் அதிகம் இருக்கும் இந்த திராட்சையினை உட்க்கொள்ளலாம்.

மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் இதில் நிறைந்துள்ளது.

எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.

கொலஸ்ட்ரால்:

நாம் உண்ணும் சில வகை உணவு மற்றும் எண்ணெய்களில் கொலஸ்டரால் அதிகம் இருக்கும்.

அத்தகைய உணவுப்பழக்கத்தை கொண்டிருப்பவர், இந்த திராட்சைப்பழங்களை அதிகளவில் சாப்பிட்டால், கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு உடலில் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ரத்த அழுத்தம்:

திராட்சைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கும். இந்த பொட்டாசியம் சத்து உடலில் ஓடும் ரத்தத்தின் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவுகிறது.

கண்கள்:
நம் கண்பார்வை முதுமைகாலம் வரை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். இந்த திராட்சையில் கண்களின் கருவிழிகளின் செல்வளர்ச்சி தன்மையை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை உண்பது கண்ணுக்கு நல்ல பயனளிக்கும்.

மேலும் கண்புரை, கண்ணழுத்தம் போன்ற நோய்களையும் போக்குகிறது.

மன அழுத்தம்:

உடல் சோர்வடையும் போதும் , பதற்றமடையும் போதும் உடல் நலத்தை பாதிக்கும் சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றன.

அத்தகையோர் இந்த திராட்சை பழத்தினை உட்க்கொள்ளலாம்.
இதில் தீய ரசாயனத்தை கட்டுப்படுத்தி உடல் மற்றும் மனதிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

Grapes Benefits For Skin:

ஒளிரும் தோல்:

பொதுவாக திராட்சையில் தண்ணீர் அதிகம் உள்ளது. எனவே தினமும் 4 திராட்சை பழச்சாற்றை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவடையும்.

திராட்சையுடன் புதினா இலைகள், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் எலும்பு சாறு ஆகியவற்றை கலந்து, பின்னர் முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைத்திருந்தால் முக பருக்களும் மறையும்.

ஆஸ்துமா குணமாக:

திராட்சை நுரையீரலில் உள்ள சளியை அதிகரித்து வறட்டு இருமலை தடுக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் தினமும் பச்சை திராட்சையை சாப்பிடலாம். ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபடவும் இது உதவுகிறது.

Also Read : Benefits of Pineapple Fruit: உடல் எடையினை குறைக்க உதவுமா அன்னாசி..! இதன் நன்மைகள், தீமைகள் என்னென்ன..?

குறிப்பு:

திராட்சையில் வைட்டமின் C நிறைந்த ஒரு பழம். வைட்டமின் C மட்டுமல்ல, இதில் மற்ற பிற வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆஸிடண்ட் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் அடங்கி உள்ளன.

இருப்பினும் அதிக அளவில் திராட்சை சாப்பிடுவதினால் வயிற்று வலி,வயிற்று போக்கு,எடை அதிகரிப்பு, கர்ப்ப கால பிரச்சனைகள் போன்ற பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *